Header Ads



'உண்மையான பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்காக, கட்சியொன்றை ஸ்தாபிக்கவுள்ளேன்' உதய கம்மன்பில

உண்மையான பௌத்தத்திற்காக, முன்னுரிமை வழங்கும் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதி செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 17-12-2014 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், ஜாதிக ஹெல உறுமயவின் 29 உறுப்பினர்களில் 17 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.