''சீரற்ற காலநிலை தொடர்பில், தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு''
நாட்டில் சீரற்ற காலநிலை ஜனாதிபதி தேர்தலை பாதிக்கக் கூடும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை வெள்ளம் மண் சரிவு காரணமாக பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண வாக்காளர்களை சீரற்ற காலநிலை பாதிக்கக் கூடுமென தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் அழைப்பாளர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 400,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக வாக்களிப்பில் வாக்காளர்கள் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால் அதற்கு மாற்று வழிமுறைகள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
சீரற்ற காநிலையால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு தேவையான எற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் கோரியுள்ளார்.

Post a Comment