Header Ads



றிசாட் பதியுதீன் இனத்துவேஷமுடைய ஒருவர் - கருணா

மீள்குடியேற்ற அமைச்சராக முன்னர் பதவி வகித்த றிசாட் பதியுதீன் அவர்கள் எந்த மீள்குடியேற்றத்தையும் செய்யவில்லை. அவரும் இனத்துவேஷமுடைய ஒருவராவார். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் தமிழர்களை கொடுமைப்படுத்தியவர்களில் அவரும் ஒருவராவார். அவர் அரசிலிருந்து பிரிந்து சென்றது நல்லதே என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தும்பங்கேணி கொச்சிபாமில் பல்நோக்கு மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச அவர்களே வெற்றி பெறப்போகின்றார். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை சிங்கள மக்களின் மனதிலிருந்து எவரும் நீக்க முடியாது. அவர் யுத்தத்தை நிறுத்தி நாட்டில் அமைதியை ஏற்படுத்திய பெருமைக்குரியவராவார். இன்று நாங்கள் நிம்மதியாக வாழ்கின்றோம்.

இன்று மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருப்பவை இனத்துவேஷம் நிறைந்த கட்சிகளாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்காக உங்களை வாக்களிக்கச் சொல்லப்போகின்றது? கொழும்பிலிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சுமந்திரன் அவர்கள் சந்திரிகாவிடம் இருபது கோடி ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு மைத்திரிக்கு ஆதரவளிக்கச் சொல்லியிருக்கின்றார். அவருக்கு வடக்கு கிழக்கை பற்றி எதுவுமே தெரியாது. தமிழில் பெயர் மட்டும் தான் அவருக்குள்ளது.

மட்டக்களப்பில் வாழ்கின்ற மட்டக்களப்பு மக்களின் துன்பங்களை நன்கறிந்த மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு என்ன சொல்லப்போகினறார்கள். இனத்துவேஷிகளுக்கு வாக்களிக்கச் சொல்லப்போகின்றார்களா? மைத்திரி வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினத்தைப் பற்றி ஒரு வசனம் கூட உள்ளடக்கப்படவில்லை. அவர் சிறுபான்மையினத்தை கணக்கில் எடுக்கவேயில்லை. தங்களுடைய பதவிகளுக்காகவுத் கொள்கைகளுக்காகவும் நூறு நாட்களில் மாற்றத்தை கொண்டு வரப்போவதாகக்கூறி போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நூறு நாட்களில் அனைத்தையும் எப்படி மாற்ற முடியும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச அவர்கள் பாரபட்சமில்லாமல் இனத்துவேஷமில்லாமல் எங்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டு எங்களுக்காகவும் பணியாற்றி வருகின்ற ஒருவராவார். தமிழ் மக்கள் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காது தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் தமிழினத்தின் எதிர்காலம் பற்றியும் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றியும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக நடக்கவேண்டுமானால் தமிழன் தன்மானத்துடன் வாழவேண்டுமானால் மகிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும்.

முன்னரெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் வெல்கின்ற அரசாங்கத்தின் பக்கமே நின்றார்கள். அவர்களின் எதிர்ப்பினால் தமிழர்களுக்கான அபிவிருத்திகள் இல்லாமல் இருந்தன. ஆனால் இன்று பாரிய அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. தமிழர்களை வளர்த்துக்கொள்வதற்கும் தமிழ்த் தலைவர்களை உருவாக்கிக்கொள்வதற்கும் நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

தமிழர்கள் அணி திரண்டு ஜனாதிபதிக்கு வாக்களித்தோமானால் பெரிதளவிலான மாற்றத்தை கொண்டுவர முடியும். அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக்கு செல்பவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அரசாங்கம் எமக்கு நல்லதைச்செய்யும்போது நாமும் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சராக முன்னர் பதவி வகித்த றிசாட் பதியுதீன் அவர்கள் எந்த மீள்குடியேற்றத்தையும் செய்யவில்லை. அவரும் இனத்துவேஷமுடைய ஒருவராவார். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் தமிழர்களை கொடுமைப்படுத்தியவர்களில் அவரும் ஒருவராவார். அவர் அரசிலிருந்து பிரிந்து சென்றது நல்லதே.

12 comments:

  1. You also will have to go home on
    09.01.15 with your master.We never
    Forget the past! So, the Tamil people.

    ReplyDelete
  2. கொலைகாரர்களும், கொள்ளையர்களும், காட்டிக்கொடுத்த இனத் துரோகிகளும், கருத்துச் சொல்லும் அளவுக்கு நாட்டின் நிலைமை கேவலமான இடத்திலுள்ளது. கொலையும் கொள்ளையும் தலைமை தாங்கி நடத்திய நயவஞ்சக நரிகள் எல்லாம் இப்போது அறிக்கை விடும் கேவலமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இனத்துவேசம் பற்றி தன் இனத்தைக் காட்டிக்கொடுத்த எட்டப்பன்கள் பேசுவது விந்தையான விஷயம்தான்.

    ReplyDelete
    Replies
    1. Thamilanukke thurokam shaiza thamilanappa neer izil enna rishad ada poya neer ellm oru thamilan
      ???.

      Delete
    2. Mr. Gee. Ur comment v.good that's enough.for killer karuna .so he will be soon in jail.

      Delete
  3. This is one of the reasons (Karuna in the Government) why Muslims should not vote for MR. Karuna who led the massacres of Muslims and Sinhalese in the East including the one in Kattankudy, Hisbulla's home town. He who divided Tamils and Muslims permanently in the East.Can't we bring this murderer before justice ? i think not possible in SL

    ReplyDelete
  4. you are a most wanted terrorist man, in your racial attack you targeted baby, women and innocent people, are you talking about racism?, it is disgusting,
    MR is safe for you otherwise people don't know who will brake your head as your partner had the punishment, count the days.

    ReplyDelete
  5. Unaku tamilarhalai Patti pesa yenta Aruhatayu Kidayatu Patavyum Panamum Kidaitaaal Unnai pattyum Ippadita Pesuvai
    Don't Talk It's Like Stuppppid

    ReplyDelete
  6. இன துவேசம் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இரக்கிறது சொந்த மாவட்டத்தில் சகோதர சமுகத்தை இன அழிப்புச் செய்ததும் போதாமல் சொந்த இனத்தையும் காட்டுக்கொத்த பெருமையை பெற்றுக்கொண்ட இவர் இன துவேசம் பேச வந்துட்டாரு

    ReplyDelete
  7. இனத்துவேஷம் பற்றி நீங்கள் பேசுவதுதான் வேடிக்கை யாக உள்ளது ஹி ஹி ஹி

    ReplyDelete
  8. தமிழனின் துரோகி கருணா என்று தமிழன் சொல்கின்றானே. தமிழனைக்காட்டிக்கொடுதவன் கருணா என்று சொல்கின்றார்களே, அது மட்டுமா முஸ்லிம்களின் படுகொலைக்கெல்லாம் கருணாதான் காரணம் என்று ஆதார பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளதே. என்னதான் இருந்தாலும் ஒன்றாக போராட்டத்தில் ஈடுபட்ட இனத்தையே காட்டிக்கொடுத்த பெருமை வேறு யாரைச்சேரும். புலிகளின் படுகேவலமான வேலைகள் செய்தது கருணாதான் அதனால்தான் இன்று புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்தது.

    ஒட்டுமொத்தத்தில் புலிகள் தோல்விக்கு மூல காரணமே கருணாதான் புலிகளின் தலைவர் பாணியில் சொல்லவேண்டுமாயின் நீ அவருடைய எதிரியல்ல துரோகியாம். துவேசம் உன் மனதில் இருந்ததனால்தான் நீ தமிழைனை இன்று சின்னாபின்னப்படுமளவிற்கு ஆக்கியிருக்கின்றாய். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற காலமிது.

    ReplyDelete
  9. Mr. Gee ur comment very good that's enough.for killer karuna so.soon he will be in jail .

    ReplyDelete
  10. HA HA HA HA SIR ENNA THOONKAMLE KANAVU KANREENGA POOLA (EN ANPIRKURIYA INA THUVESA PAVIYE) NEEYELLAM PESUM ALAVUKKU ORU KEVALAMANA ARASIYAL THALAIVAN IVAN ILLAI

    ReplyDelete

Powered by Blogger.