ரிஷாட் பதியூதினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்கேற்பு
-Adt-
வாழ்வின் எழுச்சி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியா - செட்டிகுளம் - முதலியாகுளம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று 26-1-2014 இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வாழ்வின் எழுச்சி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் பயனாளிகள் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட மக்கள், அவை ரிஷாட் பதியூதினின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டதாகவும் செட்டிகுளம் பிரதேச செயலாளரிடம் முறையீடு செய்தனர்.
அந்த நிதியை உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
இதில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதரலிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த முறைகேடுகள் தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, இந்த திட்டத்தில் வழங்கப்பட்ட நிதியை ஒரு வாரத்திற்குள் பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.
.jpg)
This all drama from some of enemies
ReplyDeleteஇதுவும் மகிந்தவின் அடிவருடிகளால். மகிந்தவின் நிகழ்ச்சி நிரலில் உருவாக்கப்பட்ட நாடகம். " நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா" என்ற பாடல் வரிகள் ஞபகத்திற்கு வருகின்றன
ReplyDeleteமண்ணாங்கட்டி ராஜ உடைய வேலைதான். நாட்டின் முப்படைகளின் தளபதியாக இருந்துகொண்டு அனைத்து பலங்களையும் பாவித்துக்கொண்டு நீதியை நசுக்கிக்கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ் இவர்களுக்கு இந்த தேர்தலுடன் ஒரு முடிவுகட்ட நாம் அனைவரும் பிரார்த்திப்போம் அதுதான் நமக்கு வெற்றியை ஈட்டித்தரும்
ReplyDelete