Header Ads



ரவூப் ஹக்கீமின் வீட்டுக்கு வந்த பசில் ராஜபக்ஸ, தற்போது அலரி மாளிகையில் ஹக்கீம்

ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தில் 22-12-2014 இரவு 9.45 மணியளவில் அதிரடியாக உட்புகுந்த அமைச்சர் பசில் ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீமுடன், ஜனாதிபதி மஹிந்த ரராஜபக்ஸ முக்கிய பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் பசில் ராஜபக்ஸவுடன், ஜனாதிபதி மஹிந்தவை சந்திப்பதற்காக உடனடியாக தனது வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

தற்போது அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து கிடைக்கப்பெற்ற  மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறியவருகிறது.

இதேவேளை இதுகுறித்து மேலதிகமாக அறிந்து கொள்வதற்காக ஜப்னா முஸ்லிம் இணையம், தற்போது சில நிமிடங்களுக்கு முன் ரவூப் ஹக்கீமுடைய கையடக்க தொலைபேசிக்கு 3 முறை Call எடுத்தபோது, மறுபக்கம் மணி அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் விடை அளிக்கப்படவில்லை

3 comments:

  1. Is Hakeem under house arrest now?

    ReplyDelete
    Replies
    1. Maybe.already ghoda put army exercise in Colombo

      Delete
  2. பாவம் சூழ்நிலை கைதி

    ReplyDelete

Powered by Blogger.