ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக, அம்பாறை மாவட்டத்தில் 6800 அரச ஊழியர்கள்
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக அம்பாறை மாவட்டத்தில் 6800 அரச ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டடியலின்படி 4 இலட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். எனினும் இம்முறை 24 ஆயிரத்து 934 பேரால் இத் தொகை அதிகரித்துள்ளது.
இதன் பிரகாரம் இம்மாவட்டத்தில் 464 சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோஸ்தர்களும் , 548 கனிஸ்ட தலைமை தாங்கும் உத்தியோஸ்தர்களும் , இதற்கு மேலதிக பணிகளுக்காக சிறு தொகையினரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 6800 பேர் கடமையாற்றவுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை , கல்முனை , சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய 4 தொகுதிகளிலும் 464 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சம்மாந்துறை தொகுதியில் 87 வாக்களிப்பு நிலையங்களும் , பொத்துவில் தொகுதியில் 151 வாக்களிப்பு நிலையங்களும் , கல்முனைத் தொகுதியில் 66 வாக்களிப்பு நிலையங்களும் , அம்பாறை தொகுதியில் 160 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான நீல் த அல்விஸ் தெரிவித்தார்.
வாக்கு பெட்டிகளை வழங்குவது தொடக்கம் பெறுவது வரையும் மற்றும் வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியிலே இடம்பெறவுள்ளது.
.jpg)
Post a Comment