Header Ads



காத்தான்குடி வெள்ளத்தில் (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக இப் பிரதேசத்தின் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதுடன் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இடை விடாது பெய்து வரும் இம் மழையினால் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளதுடன் பல வீதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதுடன் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதே வேளை வெள்ள நீரினால் வீடுகளில் இருக்க முடியாதவர்கள் தற்காலிக முகாம்களிலும் ,உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தற்காலிக முகாம்களில் தங்கி இருக்கின்ற மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் துரிதமாக வழங்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை வழங்கும் முகமாக காத்தான்குடி தள வைத்தியசாலையினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடமாடும் வைத்திய முகாமும் தற்காலிக முகாம்களில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.