கொழும்பில் தேசிய மீலாத் விழா ஆரம்ப நிகழ்வு - பிரதமர் தலைமையில் நிகழ்வு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
2015ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு அதன் ஆரம்ப நிகழ்வினை கொழும்பில் நடாத்துவதற்கு திணைக்களம் தீர்மாணித்துள்ளது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி ஞாயிற்றுக் கொழும்பு-07 இல் உள்ள தெவட்டகஹ பள்ளிவாசலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவிக்கின்றார்.
காலை 6.00 மணிக்கு மேற்படிப் பள்ளி வாசலில் சமய நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு பிரதமர் தலைமையில் மீலாத் அங்குரார்ப்பன நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன. மேற்படி நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளதால் மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பணிப்பாளர் கேட்டுக் கொள்கின்றார்.
.jpg)
மீளாத்து விழாவுக்கு ஏமாறும் அளவுக்கு தற்போதைய நிலையில் இல்லை மீளாத்து விலா நடத்தச்சொல்லி யார் சொன்னது இதுக்கு பின்னால் இந்த மஹிந்தக்கூட்டத்துக்கு பின்னால் மிச்சம் மீதி திண்டு திரியும் கூட்டம்தான் போகும்
ReplyDelete