Header Ads



10 நாடுகளுக்கு இரட்டைக் குடியுரிமை

-GTN-

இன்றைய தினம் முதல் பத்து நாடுகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வு ஒன்றுக்கு தோற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையின் கீழ் இலங்கையர்கள் நேரடியாகவே இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள முடியும் என சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் முதலில் ஐந்து ஆண்டுகள் வதிவிட உரிமையை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதன் பின்னரே இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் வாழ்ந்து பெரும் எண்ணிக்கையிலான இலங்கைப் பிரஜைகளின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, அவுஸ்திரேலிய, நோர்வே, இத்தாலி  மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இவ்வாறு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Preparing ground to escape ... for whom will be charged for their wrongs in the past.

    ReplyDelete

Powered by Blogger.