Header Ads



விமல் வீரவன்சவின் கட்சியிலிருந்து 5 பேர் பல்டி அடிப்பு..!


விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி கட்சியின் உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஜே.என்.பி கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமல் வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்த ஒரு மாகாணசபை உறுப்பினர், இரண்டு மாவட்டத் தலைவர்கள் மற்றும் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்வாறு ஆளும் கட்சியை விட்டு விலகி, எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தனிப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாக கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விமல் வீரவன்ச ஓர் சந்தர்ப்பவாதி எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பல்வேறு காரணங்களுக்காக கட்சியை விட்டும் அரசாங்கத்தை விட்டும் விலகுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கட்சியை விட்டு விலகி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதரவளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். gtn

1 comment:

  1. Vimal... Do not worry of what you spoke .... mmm you also ..think of it.

    ReplyDelete

Powered by Blogger.