Header Ads



'மைத்திரியை ஆதரிக்க வேண்டுமென்பது, என் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானம்'

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்று எடுத்த தீர்மானம் தனது வாழ்க்கையில் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானம் என முன்னாள் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று 31-12-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட போவதாக அறிந்து கொண்ட நாளில் இருந்து அவருக்கு ஆதரவு வழங்க நான் விருப்பத்துடன் இருந்தேன். நாட்டின் சகவாழ்வு குறித்து சிந்தித்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்தேன்.

கடந்த 9 ஆண்டுகள் நான் அரசாங்கத்தில் இருந்தேன். இதனால், நான் அரசாங்கத்தை விமர்சிக்க போவதில்லை எனவும் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைஸர் முஸ்தபா, அடிப்படைவாதம் இருக்கும் இடத்தில் தான் இருப்பதில்லை என கூறியுள்ளார்.

2 comments:

  1. He has to tell us why he cross over to Maithree. To get the Deputy Minister Post again.??????????????????/

    ReplyDelete
  2. IA Ghafoor, you conform MS's
    Victory! Thanks.

    ReplyDelete

Powered by Blogger.