Header Ads



வாட்ஸ் - அப்பில் மனைவி - விவாகரத்து செய்த கணவர்

வாட்ஸ் - அப்'பில் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் கிடைக்காததால், சவுதி அரேபியாவை சேர்ந்த நபர், தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த, 30 வயது இளைஞர், தன் மனைவியின் செயல்பாட்டால் மன உளைச்சலுக்கு ஆளானார். அவரின் மனைவி, தன் ஸ்மார்ட் போனில் நண்பர்களுடன் உரையாடுவதும், 'வாட்ஸ் - அப்'பில் குறுஞ்செய்தி அனுப்புவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். 

நாளடைவில், வீட்டு வேலைகளையும் கவனிக்காமல், குழந்தைகளையும் பராமரிக்காமல், ஸ்மார்ட் போனில் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார். கணவர் இதை பல முறை கண்டித்தும், அப்பெண் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் கணவர், வாட்ஸ் - அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். 

ஆனால், கணவர் அனுப்பிய எந்த குறுஞ்செய்திக்கும், அப்பெண் பதில் அனுப்பவில்லை. அவரை தொடர்பு கொண்டும் பேசவில்லை. இதனால், எரிச்சலடைந்த அந்த நபர், தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். 

வழக்கு விசாரணையின் போது, அப்பெண் தன் நண்பர்களுடன் பேசியதில் பிசியாக இருந்ததால், தன் கணவருக்கு பதில் அனுப்ப முடியவில்லை எனக் கூறினார். இதையடுத்து, அந்த நபர், தன் மனைவியை விவாகரத்து செய்தார். இச்சம்பவம், சவுதி அரேபியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

1 comment:

  1. saudila paraparappu atpaduthura pala wisayam irukkungo...

    ReplyDelete

Powered by Blogger.