இந்திய காரில் பயணிக்க மாட்டேன் - பாக்கிஸ்தான் பிரதமர் பிடிவாதம்
'நேபாளத்தில் நடக்கவுள்ள, 'சார்க்' நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய அரசால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத காரில் பயணிக்க மாட்டார்' என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், நவ., 26, 27ம் தேதிகளில், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடக்கிறது. இதில், கூட்டமைப்பில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை, பூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கஉள்ளனர். இந்த தலைவர்கள் பயணிப்பதற்காக, மத்திய அரசு சார்பில், குண்டு துளைக்காத கார்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நேபாளம் செல்லும் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத காரில் பயணிக்க மாட்டார். அவர் பயணிப்பதற்காக, பாகிஸ்தானிலிருந்து ஒரு கார் கொண்டு செல்லப்படும்.இந்தியா - பாக்., நாடுகளுக்கு இடையே, தற்போதுள்ள கருத்து வேறுபாடுகளுக்கும், இந்த பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்க அதிபர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்படும் கார்களில் தான் பயணிக்கிறார்; அதுபோல் தான், இதுவும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
.jpg)
Post a Comment