ஜனாதிபதி மஹிந்தவை எவரும் தோற்கடிக்க முடியாது - பைசர் முஸ்தபா
வங்குரோத்து நிலையை அடைந்தி ருக்கும் எதிர்க்கட்சிகள் அரசியல் விவாதமேடையொன்றை உருவாக்கு வதற்காகவே ஜனாதிபதி மூன்றாவது தடவையும் போட்டியிட முடியாது, நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை முன்வைத்திருப்பதாக பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா குற்றஞ்சாட்டினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும் போட்டியிட முடியாது என்ற விடயத்தை தூக்கிப்பிடித்து அரசியல் மேடையொன்றை அமைப்பதற்கே அவர்கள் முயற்சிக்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரமுறை ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவரும் எதிர்க்கட்சியினர், அது தொடர்பாக விவாதிக்கக் கூடிய இடமான பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்லாமல், வீதிகளில் இறங்கி கூக்குரல் இட்டு வருகின்றனர். தமது அரசியல் நிலைப்புக்காக விவாதமேடையொன்றை உருவாக்கும் நோக்கிலேயே அவர்கள் இவ்வாறான கருத்துக்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைக் கோரும் உரிமை ஜனாதிபதிக்கு உள்ளது. இதற்கமையவே அவர் வியாக்கியானம் கோரியிருந்தார். இதற்கு உச்ச நீதிமன்றமும் பதில் வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் வழங்கிய விளக்கமே இறுதியானது. இதனை எவரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகள் தமக்கான அரசியல் மேடையொன்றை உருவாக்கும் நோக்கிலேயே இவ்வாறான விடயங்களைப் பயன்படுத்தி வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதில் அர்த்தமில்லை.
ஜனநாயக ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தோற்கடிக்க முடியாது என உணர்ந்து கொண்டதாலேயே அவர்கள் இவ்வாறான விவாதங்களை உருவாக்கி மக்களைக் குழப்பி அவற்றின் ஊடாக இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

hello allah wil deside,he is the one and only power.mr fisal you go and pray mahinda.
ReplyDelete