இது மேர்வின் சில்வாவின் தத்துவம்..!
பிள்ளையில்லாத தாய்மாரும் கணவன் மனைவியிடையே சண்டைகளை தீர்த்துக்கொள்வதற்குமே மக்கள் தனது அமைச்சுக்கு படையெடுப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா இன்று சபையில் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்திற்கு ஒதுக்கப்பட்ட கால அவகாசம் போதாது. எனவே விடயத்தானங்களை சபையில் சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கி பகல் வேளையிலேயே சபையை விட்டு வெளியேறும் நிலைமையை எற்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் டாக்டர் மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் புதிய வாளியொன்று கிடைத்தவுடன் பழைய வாளியை வீசிவிடக்கூடாது. ஏனென்றால் புதிய வாளியில் ஓட்டை ஏற்பட்டால் பழைய வாளியின் உதவி தேவைப்படும். இது உணரப்பட வேண்டும்.
என்னால் இறுக்கமானதை இலகுவானதாக மாற்ற முடியும். இலகுவானதை இறுக்கமாக்கவும் முடியும். பிள்ளையில்லாத தாய்மார்கள் அதற்கான தீர்வை தேடி எனது அமைச்சுக்கு வருகின்றனர். இதேபோன்று குடும்பத்தகராறு கணவன் மனைவியிடையே சண்டைகளை தீர்த்துக்கொள்வதற்கும் எனது அமைச்சை தேடி வருகின்றனர்.
சிக்கலான விடயம்தான். ஆனால், ஜனாதிபதி எனக்கு வழங்கிய பொறுப்பை சரியான விதத்தில் செய்து வருகின்றேன். எனது அமைச்சு தொடர்பாக பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட காலநேரம் போதாது.
எனவே, எமது நேரத்தை வீணாக்காது அமைச்சின் விடயத்தை சபையில் சமர்ப்பிக்க அனுமதி வழங்கி நேர காலத்தோடு வீடுகளுக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
சவால்கள் இல்லாவிட்டால் மேர்வின் சில்வாவின் பெயர் பிரகாசிக்காது. சவால்கள் இருந்தால்தான் எனது பெயர்பிரகாசிக்கும் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
.jpg)
Post a Comment