Header Ads



ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக முன்வர வேண்டும் - ஞானசாரரர்

ஐக்கிய தேசியகட்சி தமது அடையாளத்தை இழக்கக்கூடாது என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது

கொழும்பு செய்தியாளர் சந்திப்பின்போது இன்று கருத்துரைத்த பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக்கட்சி ஒரு தலைவரை உறுதிப்பட தெரிவுசெய்யவேண்டும்.
இதனை விடுத்து பல்வேறுப்பட்ட இடங்களில் பணியாற்றிய பலர் இன்று பொதுவேட்பாளர் பதவிக்காக தடுமாறுகின்றனர்

எனவே நாட்டில் கொள்கை ரீதியாக செயற்படக்கூடியவர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக முன்வரவேண்டும் என்று கோருவதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.