இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்த உறுதியான அரசும், ஜனாதிபதியும் எமக்குத் தேவை
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
30 வருட யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிலிருந்து விடுபட முதற்கட்டப் பணிகளை கடந்த ஐந்து வருடங்கள் அபிவிருத்திக்கு பெரும் தொகை நிதியை செலவிட்டு நாட்டை கட்டியெழுப்பப் பாடுபட்டார்.
இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் நடைபெற்ற பொது நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற தேசிய மர நடுகை தேசத்திற்கு நிழல் திட்டத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தபின் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த கருத்தை வெளியிட்டார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து பேசுகையில்
எதிர்வரும் ஜனவரி முதல் மக்களை கட்டியெழுப்புகின்ற ,வறுமையை போக்குகின்ற வளமான மக்களை உருவாக்கும் பாரிய வேலைத் திட்டமொன்றினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் எமது அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
ஆசியாவிலேயே பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக எமது நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியான தலைமைத்துவமும் உறுதியான அரசும் தேவை ஆட்சியும் தேவை இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாம் தற்போது கொண்டிருக்கின்றோம்.
இந்த அரசை தோற்கடிப்பதன் மூலம் நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை உருவாக்கவும் நாட்டைகுட்டி சுவராக்கவும் சில சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன இதற்கு நாம் ஒரு போதும்இடமளிக்கக்கூடாது. எமக்கு கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு இந்த நாட்டைகட்டியெழுப்பவும்,வறுமையை ஒழிக்கவும் கிடைத்துள்ளது.
இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை சமாதானத்தை ஏற்படுத்தி அபிவிருத்தி அடைந்த நாடாக இப்பிராந்தியத்தில் முன்னெற வேண்டுமாயின் உறுதியான அரசும் ஜனாதிபதியும் எமக்குத் தேவை இதனாலே ஜனாதிபதியையும் அரசையும் தோற்கடிக்க முயற்சிக்கின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்திக் கொள்ளமுடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆகவே இந்த சூழ் நிலையில் நாம் உறுதியாகவிருந்து உறுதியான அரசை உறுதியான ஆட்சியை இந்த நாட்டில் வைத்துக்கொள்வதனூடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
நமது மாவட்டம் வறுமையில் மிக கூடிய மாவட்டம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை எமது மாவட்டத்தில் அமுல்படுத்தவுள்ளோம் பாரிய நிதிந் செலவில் உள்நாட்டு உதவிகளை இதற்கு செலவிடவுள்ளோம் வீடு வீடாகச் சென்று சுமார் 2000 உத்தியோகத்தர்களைக் கொண்டு எமது மாவட்டத்தின் வறுமை இனம் காணப்பட்டுள்ளது என மேலும் குறிப்பிட்டார் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.
திரு. ஹிபுல்லாஹ் அவர்களே, நீங்கள் கனவிலும் நினைக்காத வகையில் பணமும் பதவியும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது போதும், தயவு செய்து அல்லாவுக்காக இந்த நாட்டின் எதிர்கால முஸ்லிம் சந்ததிகள் உரிமையுடனும் சுதந்திரமாகவும் வாழ வேண்டுமானால் கொஞ்சம் பொத்திக் கொண்டு இருங்கள். இந்த துவேசம் பிடித்த ராஜபக்ச அன் கோ களை வீட்டுக்கு அனுப்பு மட்டும்.
ReplyDeleteஇவ்வளவு காலமும்
ReplyDeleteசெய்யாதத இனிச்
செய்யப் போராறாக்கும்..
அபிவிடுத்தீங்கிற பேரில
நம்ம நாட்டோட சில
பகுதிகள சைனாக்
காரனுக்கு அடகு வச்சிருகிறத
நீங்க அறிவீகளோ இல்லியோ?
பள்ளிவாயல்கள உடைக்கிறதும்
இந்த நாட்டினுடைய
அபிவிருத்திக்குத்தான்
போலும்?
இருக்கும் ஆட்சிக்கு ஆப்பு வந்தால்? என்ற பயம் இவர்களுக்குத்தான் அதிகம். கேவலமான பொழப்புகள். நாட்டில் சமாதனத்தை கட்டியெழுப்பும் ஆட்சியா? கடந்த காலத்தில் நடந்தது. கண்ணிருந்தும் குருடர்கள் காதிருந்தும் செவிடர்கள் என்பதற்கு இதுபோன்ற செல்லாக்காசு, சுய நலவாதிகளை விட யாரைச்சுட்டிக்காட்டுவது.
ReplyDeleteஎன்னதான் நாம் பயங்கரவாதிகள் என்று சில கட்சிகளை சொல்லிக்கொண்டிருந்தோமோ இன்று அவர்களுடைய கட்சிகள் அரசாங்கத்தை எதிர்தவண்ணம் விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றன.
ReplyDeleteமுஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களாலும் தூக்கி வீசப்படவுள்ளார்கள் என்பது வேறுவிடயம். அதே சமயம், இன்னும் சுகபோகங்களை நினைத்தால் எப்படியாவது இன்னுமொரு முறை பார்த்திடலாமா? என்றுதான் தவிக்கின்றார்கள். நம் முஸ்லிம்களிடையே பலர் உள்ளார்கள் அவர்களை ஓட விட்டு விரட்டி விரட்டி அடிக்கும் நிலை வெகு விரைவில் முஸ்லிம்கள் மத்தியில் உருவாகிவிட்டது.
தமிழனைக் கொத்து கொத்தா அழிக்கும் வரைக்கும் நல்லவரா தெரிந்த
ReplyDeleteஜனாதிபதி இப்ப கசக்கிறாரோ..உங்களுக்கு வந்தா மட்டும் இரத்தம்
எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா ?
நீங்கள் நல்லதொரு மன நோய் மருத்துவரை நாடினால் நல்லது. நிட்சியமாக நீர் தற்போது ஸ்ரீ லங்காவில் வாழவில்லை என்பது மட்டும் உண்மை. தற்போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எப்படி எண்பதுகளுக்கு முதல் வாழ்தார்களோ அப்படி இப்போது வாழத்துவங்கி உள்ளார்கள். தயவு செய்து உனது நர புலி சிந்தனையை களைந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ReplyDeleteதமிழ்ப் பெண்களை உங்கள் ஊர்காவல் படை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி கொன்றபோது இந்த உறவு எங்கே போனது?வீரமுனை,சென்ரல் கேம்ப்,சவளக்கடை,பெரியநீலாவணை,மஞ்சந்தொடுவாய்,ஏறாவூர்,புனானை,இந்த இடங்களிலெல்லாம் எங்கள் உறவுகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தீர்களே,அப்போது இந்த தமிழ் முஸ்லிம் உறவு எங்கே போனது,ஒரு இனமே அழிக்கப்பட்ட நேரத்தில் பால் சோறு பகிர்ந்துண்டு பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி கொண்டாடும்போது இந்த உறவு தெரியவில்லையா
ReplyDeleteகரன் கண்ணா. மன்னிக்கவேண்டும். தப்பு செய்தது ஒருபோதும் முஸ்லிம்கள் அல்ல. உம்மைப்போன்ற ஒரு புறம் தலையும் ஒருபுறம் வாலையும் காட்டும் தூரோகிகள்தான் என்பதை அடித்துச்சொன்னார்களே. அத்தோட நீங்களெல்லாம் நாட்டை விட்டு ஓடினீங்க இன்னும் வர முடியல. இதைவிட கொடுமை வேறென்ன வேண்டும். சுருக்கமா சொன்னாங்களே உம்மைப்போன்றவர்களுக்கு ”திண்ட தட்டில் பேன்றவர்கள்” அது வேறு யாருமில்ல மிஸ்டர் கறள் கண்ணன் உம்மைப்போன்ற சமூக தூரோகிகள்தான். உமது கண்ணில் கறள் படிந்துள்ளது அதை வைத்து நல்லவைகளை பார்க்க முடியாது. அது சரி உம்மை யார் வெத்திலைவைத்து அழைத்தார் இங்கு வந்து குலாவுவதற்கு,,
ReplyDeleteமுஸ்லிம்கள் எப்போதும் முஸ்லிம்களாக இருக்க விரும்புவார்கள், உம்மைப்போன்றவர்களுக்கு இன்னும் முஸ்லிம்கள்மீது காழ்ப்புணர்வு. ஏன் ராசா வாழ்கை பத்தாயிரம் வருசமா வாழ்வது. உமக்கேல்லாம் வாழ்வைப்பற்றி எங்கய்யா புரியப்போகின்றத.