Header Ads



ராஜபக்ஷவை களத்தில் சந்திக்கும், பொது வேட்பாளர் யார்..?

(நஜீப் பின் கபூர்)

கோதாவுக்கு வருவது சந்திரிகா, சிரிசேன,சோபித, அர்ஜூன,கரு!
19ம்திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளி வரும்!
18ம் திகதி ராஜபக்ஷவுக்கு எதிராக ஜேவிபி மாபெரும் பேரணி!
ஆளும் தரப்பிலிருந்து சொல்லுமளவிற்கு தாவல்கள் நடக்காது!
அரசியல் வாதிகளை விலைக்கு வாங்க ஆளும் தரப்பு ஏற்பாடு!

2015 வரவு செலவுத் திட்டம் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும். மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையும் தேர்தலுக்கு வருவது உறுதி போன்ற தகவல்களை பல மாதங்களுக்கு முன்னர் நாம் எமது வாசகர்களுக்கத் தெளிவாகச் சொல்லி இருந்தோம். அத்துடன் இதில் எந்த விதமான சந்தேகங்களுக்கும் இடம் கிடையாது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தோம். எமது கருத்துக்கள் அப்படியே நடந்தேறி இருக்கின்றது. இந்த விடயத்தை நமது வாசகர்களுக்கு சுட்டிக் காட்டி அரசியல் அந்தரங்கங்களில் நடக்கின்ற புதிய பல தகவல்களுடன் இந்த வாரமும் நாம் நம்பகத்தனமான தகவல்களை வாசகர்களுக்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூய்மையான நாளைக்காக என்ற அதுருலியே ரதன தேரரின் அமைப்பு கொழும்பில் கூட்டமொன்றை நடாத்தியது. கொழும்பு நகர பிதா முஸம்மில்  இதற்காகக் கொமும்பு ஹயிட் மைதானத்தை ஒதுக்கிக் கொடுத்திருந்தாலும் கொழும்பு நகர ஆணையாளர் அதனை இரத்துச் செய்து விட்டு வேறும் ஒரு தரப்பினருக்கு அந்த மைதானத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றார். பின்னர் கோட்டே முத்தையா மைதானத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் அதில் கலந்து கொண்டிருந்தனர். 

ஆளும் தரப்புக்குப் போய் அமைச்சுப் பதவிகளை ஏற்க இருந்த மங்களவும் இதில் கலந்து கொண்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அவர் மேடைக்கு வரும் போது பொது மக்கள் தமது அதிர்ப்தியை வெளியிட இருக்கின்றார்கள் என்ற தகவல்கள் கசியத் துவங்கியதால் அவர் ரணிலுடன் ஒன்றாக இணைந்து  மேடை ஏறியதால் நிகழ இருந்த விபரீதம் தவிர்க்கப்பட்டது என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது. அதுருலியவின் இந்தக் கூட்டத்தில் ஜேவிபி சார்பில் லல் காந்த கலந்து கொண்டு உரையாற்றி இருந்தமை முக்கியத்துவம் வாய்ததாகக் கருதப்படுகின்றது. தற்போது ஒரு சுயேட்சை உறுப்பினராகள்ள அர்ஜூன ரனதுங்ஹவும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். சமசஜ மற்றும் கம்யூனஸ்ட் கட்சி மாற்றுக் கருத்துடைய குழுவினரும் மேடையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

இக் கூட்டத்தில் உரையாற்றிய அதுருலியே ரத்தன  தேரர் தமது கோரிக்கைகளுக்கு இணங்க ராஜபக்ஷ நடந்து கொள்ள விட்டால் அவரை தோற்கடித்தே தீருவது என்று அவர் அங்கு சூளுரைத்துக் கொண்டிருந்தார். இந்தக் கூட்டத்தில் ஆளும் தரப்பு அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ள இருந்தாலும், அவர்கள் இன்று கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை எனவே ஜனாதிபதித் தேர்லுக்கு அறிவிப்பு வந்ததும் 10 பேர் அளவில் ஆளும் தரப்பில் இருந்து வெளியேற தனக்கு வக்குறுதி அளித்திருப்பதாக தேரர் அங்கு  குறிப்பிட்டார். மேலும் ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்குத் தமக்கு ஒரு நாள் இரவு மட்டும் போதும் என்று அவர் அங்கு பேசி இருக்கின்றார்.

எனவே ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் மேடைகளில் பேசுவது போல் 50 பேர் 60 பேர் ஆளும் தரப்பில் இருந்து  வர இருக்கின்றார்கள் என்ற கதைகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள்- கதைகள் என்பது இதிலிருந்து உறுதியாகின்;றது.

அதே நேரம் கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் விமல் வீரவங்சவும் பொதுபல சேன முக்கியஸ்தர்களும் இணைந்து ராஜபக்ஷவுக்கு ஆதரவாக் ஒரு கூட்டத்தை அங்கு நடத்தி இருந்தார்கள்.

அதே நேரம் ஆளும் தரப்பு தனக்குப் பெருந் தொகையான பணமும் அமெரிக்க அல்லது கணடாவில் முழுக் குடும்பத்துடனும் போய்க் குடியேர வசதிகள் செய்து தர அழைப்பு விடுத்ததாக ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருக்கின்றார் ஜனநாயக் கட்சி மாகாண சபை உறுப்பினரான யசமான. ஒரு மாகாண சபை உறுப்பினரின் தலை 50 மில்லியன் ரூபாய்களுக்கு விலைப்படுகின்றது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே எதிர்க் கட்சியில் நிச்சயமாக பல பேர் சந்தையில் விலை போக  இருக்கின்றார்கள் என்பது மட்டும் உறுதி.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் பேசிக் கொண்டிருந்த போது மேடையில் அமர்ந்திருந்த கருவும், மங்கள சமரவீரவும் ஆழ்ந்த உறக்கத்தில் மேடையில் இருந்ததை ஒரு தொலைக் காட்சி அலைவரிசை படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தது. ஒரு உணர்வு பூர்வமான தீர்க்கமான கூட்டம் நடந்து கொண்டிருந்த போது இவர்களுக்கு உறக்கம் போனது வேடிக்கையான விடயமாக அங்கு பார்க்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தல் 2010

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 14088500
பதிவான வாக்குகள் 10495451 99.03 சத விகிதம்
செல்லுபடியான வாக்குகள் 10393613 74.49 சத விகிதம்
செல்லுபடியற்ற வாக்குகள் 00101838 00.99 சத விகிதம்

ராஜபக்ஷ 6015943 57.88 சத விகிதம்
பொன்சேக்கா 4173185 40.15 சத விகிதம்
வித்தியாசம் 1842758 17.73 சத விகிதம்

இதர வேட்பாளர்கள் அனைவரும் 1.98 சத விகிதம்

ஜனாதிபதித் தேர்தல் 2015

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 15200000
அதில் தபால்  வாக்குகள் 01000000
(2014 தேர்தல் இடாப்பே ஜனாதிபதித் தேர்தலுக்கு உபயோகிக்கப்பட இருக்கின்றது. அதன்படி தேர்தல் ஆணையாளர் கொடுத்த உத்தேசக் கணிப்பு இது)

எனவே மேற்படி ஜனாதிபதித் தேர்தல் 2010 புள்ளி விபரங்களின் படி எதிரணி வேட்பாளருக்கும் ராஜபக்ஷவுக்குமிடையே வித்தியாசம் 1842758 வாக்குகள் அது 17.73 சத விகிதம் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போதய அரசியல் பின்னணியில் ராஜபக்ஷவின் செல்வாக்கு இதில் 10 சதவீத பின்னடைவை எதிர் நேக்கி இருக்கின்றது என்பது கட்டுரையாளனின் கணிப்பு. எனவே ராஜபக்ஷவே தேர்தலில் ஏறக்குறைய ஐந்து முதல் எட்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இன்னும் முன்னணியில் இருந்து கொண்டிருக்கின்றார்.

ராஜபக்ஷவுடன் கோதாவுக்கு வருவது தொடர்பாக சந்திரிகா, சிரிசேன, சோபித, அர்ஜூன, கரு போன்றவர்களின் பெயர்கள் தற்போது உச்சிரிக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே சந்திரிக்க போன்ற ஒரு செல்வாக்கான வேட்பாளர் களத்தில் குதித்தால் மட்டுமே இந்தத் தேர்தலில் வலுவான ராஜபக்ஷாவுக்கு சவால் விடுக்க முடியும். 

சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிரிசேனாவின் பெயரும் இந்த பொது வேட்பாளர் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகின்றது. எனவே இந்த கதை யதார்த்தமானால் சந்திரிகா பண்டாரநாயக்க பொது வேட்பாளராக வருவதை  விட இது ராஜபக்ஷக்களுக்கு பேரதிர்ச்சியான செய்தியாக அது அமைய முடியும். இது விடயமான கடந்த வியாழன் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மைத்திரிபல சிரிசேன கொடுத்த பதிலும் ஒழு மழுப்பலாக இருந்தது என்றுதான் அவதானிக்க முடிந்தது.

இதற்கு மத்தியில் முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அர்ஜூன ரணதுங்ஹவின் பெயரும் பொது வேட்பாளர் விடயத்தில் தற்போது உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது பற்றி அவரிடத்தில் கேட்டால் தனக்கு இப்படி பதவிகளுக்குப் பின்னால் ஓடித் திரிய வேண்டும் என்ற தேவை எப்போதுமே இருந்ததில்லை. என்றாலும் நாட்டு நலனுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தனக்கு இந்தப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதற்காக தான் தயாராக இருப்பதாகவும் அவர் துணிவுடன் குறிபிடுகின்றார்.

தற்போதுள்ள அரசியல் அமைப்பை கடுமையாக சாடி மக்கள் மத்தியில் அதன் மோசமான தன்மைகள் காரணமாக ஆட்சியாளர்கள் இந்த அரசியல் யாப்பில் தம்மை சர்வாதிகாரிகளாக  மாறி மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருவதை மட்டுமே நாம் இந்த நாட்டில் தற்போது பார்த்துவருகின்ற ஒரே நிகழ்வாகத் தற்போது மாறி இருக்கின்றது. இந்த நிலமையை மாற்றியே ஆக வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்ற சோபித தேரர் தானும் தேவைப்பட்டால் களத்தில் இறங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.

கருவுக்கு என்னதான் சிங்கள மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இருப்தாகச் சொல்லப்பட்டாலும் ராஜபக்ஷவுடன் ஒப்பு நோக்கின்ற போது கருவின் இமேஜ் மிகவும் கீழ் மட்டத்திலேயே இருக்கின்றது. மேலும் கரு கடந்த காலங்களில் எடுத்த அரசியல் நகர்வுகள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மிகவும் அதிர்ப்த்தி நிலை காணப்படுகின்றது. எனவே இந்தத் தேர்தலில் எந்தவகையில் கரு போன்ற ஒரு முரண்பாடான மனிதன் மீது மக்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைப்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. 

எனவே பொது வேட்பாளராக பலர் தயாரக இருப்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. என்றாலும் இவர்களில் யார் ராஜபக்ஷவுக்குச் சாவல் விடுக்க கூடியவர் என்பதே எதிரணி தரப்பில் கண்டு பிடிக்க வேண்டி இருக்கின்றது.  

அதுருலியே ரத்தன தேரர் நடத்திய கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்தனவில் ஒரு மகனும் கலந்து கொண்டிருந்தார் என்பதனைப் பார்க்க முடிந்தது. மேலும் தற்போது ராஜிதவின் சில நடவடிக்கைகைகள் தொடர்பாக தற்போது ஆளும் வட்டாரங்களில் பலத்த அதிர்ப்த்தி தெரிவிக்கப்படுவதுடன் இவரது நடவடிக்கைகள் தொடர்பாகவும் தற்போது உன்னிப்பாக அவதானிக்கபட்டு வருகின்றது. 

தற்போது களுத்துறை மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பாணந்துறை நகரசபை முதல்வரும்,  ஜேவிபி  ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்த நந்தன குணதிலக்க தனது முதல்வர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு தொகுதி அமைப்பாளர் பதவியொன்றை வழங்க ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் இணங்கி இருப்பதாகத் தெரிகின்றது.

முத்தையா மைதானத்தில் அதுருலியே கூட்டம் நடாத்திக் கொண்டிருந்த அதே நேரம் தேசபக்தர்கள் என்று தம்மை சொல்லிக் கொள்கின்ற விமல் வீரவங்சவும் பொது பல சேனா முக்கியஸ்தர்கள் பலரும் இணைந்து ராஜபக்ஷவுக்கு விசுவாசமான கூட்டமொன்றை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடாத்திக் கொண்டிருந்தார்கள். இந்த கூட்டத்திற்கு அமைச்சர்களான தினேஷ் குனவர்தன மற்றும் சம்பிக்க போன்றவர்கள் வருவதாக போஸ்டர்களில் சொல்லப்பட்டிருந்தாலும் தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று அவர்கள் குறிப்பிட்டதுடன் அந்தக் கூட்டத்தில் அவர்கள் இருவரும் பங்கு கொள்ள வில்லை. 

இதற்கிடையில்18ம் திகதி ஜேவிபி ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அருகதை கிடையாது என்பது தொணிப் பொருளிலில் பேரணி ஒன்றை நடத்த இருக்கின்றது.

வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கடந்த 14ம் திகதி வெள்ளி மூன்று அம்சங்களை முன்னிருந்தி சந்திரிகா, சோபித, ரணில், பொன்சேகா, ஆகியோர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர். இதற்கிடையில் பாதுகாப்புச் செயலாளர் கேட்டாபே ராஜபக்ஷ நிமல் சிரிபால டி சில்வாவுடன் இணைந்து மாதுலுவாவே சோபித தேரரைச் வியாழக்கிழமை சந்தித்துப் பேசி இருக்கின்றார்கள். எனவே சோபித்த தேரரின் காய் நகர்த்தல்களினால் ராஜபக்ஷக்கள் குழப்பமடைந்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

ஜனாதிபத் தேர்தல் அறிவிப்புக்குப்; பின்னர் தான் எதிரணி பொது வேட்பாளர் அரங்கிற்கு வருவார் அதுவரை அவர் பகிரங்க மேடைகளில் தோன்ற மாட்டார் என்று எதிரணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் இந்த பொது வேட்பாளர் தொடர்பாக ஜனாதிபதி அறிந்து வைத்திருக்கின்றார்என்ற அறியப்படுகின்றது. எதிரணியிலிருந்து ராஜபக்ஷக்களுக்கு தகவல்களைச் சிலர் எடுத்துச் செல்கின்றார்கள் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கின்றது.

No comments

Powered by Blogger.