Header Ads



யூத வழிபாட்டுத் தலத்தில், பாலஸ்தீனர்களால் முதல் முறையாக தாக்குல் - இஸ்ரேல் அதிர்ச்சி

இஸ்ரேலியர்கள் இருவரை கடந்த மாதம் காரை ஏற்றிக் கொன்ற அப்துல் ரகுமான் ஷாலுதியின் வீட்டில், அவரது புகைப்படத்தைக் காட்டும் உறவுக்காரப் பெண். இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த வீட்டை புதன்கிழமை இடித்துத் தள்ளினர்.

ஜெருசலேமில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குலைத் தொடர்ந்து, ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேலின் மக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யிட்ஸாக் அஹாரோனோவிட்ச் கூறுகையில், ""விரைவில், ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்'' என்று தெரிவித்தார்.

எனினும், பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா அல்லது, பாதுகாப்புப் படையினருக்கான ஆயுத விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து அவர் விவரிக்கவில்லை.

ஜெருசலேமிலுள்ள யூதர்களின் வழிபாட்டுத் தலத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்த இரு பாலஸ்தீனர்கள், அங்கே வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி, கத்தி ஆகிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தினர்.

இதில் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட அந்த இருவரையும், பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

யூதர்களின் வழிபாட்டுத் தலத்தில், பாலஸ்தீனர்களால் முதல் முறையாக நிகழ்த்தப்பட்ட இத்தகைய தற்கொலைத் தாக்குல், இஸ்ரேலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாகவே மக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யிட்ஸாக் அஹாரோனோவிட்ச், ஆயுதக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதாக அறிவித்துள்ளார்.

வீடு இடிப்பு: வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பிறகு, பாலஸ்தீனர்களுக்கு எதிரான தனது நிலையை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் காவலர் ஒருவரையும், மற்றோர் இளைஞரையும் கடந்த மாதம் 22-ஆம் தேதி காரை ஏற்றி படுகொலை செய்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவரின் வீட்டை, இஸ்ரேல் அதிகாரிகள் புதன்கிழமை இடித்துத் தள்ளினர்.

பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரின் குடியிருப்புகளை தரைமட்டமாக்கும் சர்ச்சைக்குரிய கொள்கையை இஸ்ரேல் கடைப்பிடித்து வருகிறது.

இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில், அந்தக் கொள்கையைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில், வழிபாட்டுத் தலம் மீது தாக்குதல் நடத்தியவர்களின் வீடுகளும் இடிக்கப்படும் என்று யிட்ஸாக் அஹாரோனோவிட்ச் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் கண்டனம்: ஜெருசலேம் யூத வழிபாட்டுத் தலத்தில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதற்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கூறுகையில், ""வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பிறகு, பாலஸ்தீன இளைஞர்கள் - இஸ்ரேல் வீரர்கள் இடையே மோதல் நீடித்து வருவது நிலைமையை இன்னும் மோசமாக்கும்'' என்று எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ""இது போன்ற பயங்கரவாதச் செயல்கள் துரதிருஷ்டவசமானது. இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. இப்பிடித்தான் இவங்க.அவனைப் போய் சுரண்டுற.சின்னப் பிள்ளைகளின் கையில் கல்லக் குடுத்து எறிய வைக்கிற.இந்தப் பக்கம் நிண்டு ரொக்கட் அடிச்சிப்போட்டு ஓடி ஒளிக்கிற..பிறகு அவன் எழும்பி குடுக்கிறதுதான்...
    பிறகு கத்திக் கத்தி உலக நாட்டில எல்லாம் பிச்சஎடுக்கிற.இங்க ஒருத்தரு அவரோட ஊட்டுக் காசி மாதிரி கொடுக்காரு.

    எத்தனையோ வருடமா அல் அக்சா மசூதியை ஒரு பிரச்சினையும் வராம இஸ்ரேல் பாதுகாக்கிறான்.....எதுக்குடா மூக்க நுளைச்சி வாங்கிக் கட்டுறீங்க

    ReplyDelete

Powered by Blogger.