7 பேரை கொடூரமாகக் கொன்ற முதியவரை மணக்கவிருக்கும் இளம்பெண்
அமெரிக்காவில் பல விநோதங்கள் நிகழ்வது உண்டு. அதில் ஒன்றாக, 7 பேரை கொடூரமாகக் கொன்ற முதிய கைதியை இளம் பெண் ஒருவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் மேன்சன் (80) என்பவர் கடந்த 1969ஆம் ஆண்டு தனது கர்ப்பிணி மனைவி ஷரோன் டேட் உட்பட 7 பேரை கொடூரமாகக் கொன்று குவித்த குற்றத்துக்காக தனது ஆயுளை சிறையில் கழித்து வருகிறார்.
சிறையிலேயே பல ஆண்டுகளாக இருக்கும் சார்லஸ் மேன்சனை அடிக்கடி சந்தித்து வந்த சூப்டன் எலைன்ஸ் பர்டான் என்ற 26 வயது இப்பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கலிபோர்னியா மறுவாழ்வு சீர்திருத்த துறையில் அனுமதி பெற்ற விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர்.

Post a Comment