ஜனாஸா தொழுகைக்காக சென்ற, மௌலவி ஹஸ்ஸாலி வபாத்தானார்
பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
காத்தான்குடி 1ம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) (வயது 55)இன்று புதன்கிழமை காத்தான்குடியில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
ஒரு ஜனாஸா தொழுகைக்காக அவர் சென்ற போதே இம்மரணம் ஏற்பட்டுள்ளது.
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய இவர் கட்டார் கொழும்பு ரெஸ்டுரண்டில் பல வருடங்களாக பணிபுரிந்தது மட்டுமல்லாமல் பல்வேரு சமூக சேவைகளில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
இவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும் கப்று வாழ்க்கை பிரகாசிப்பதற்காகவும் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்குமாறு அவரின் குடும்பத்தார் மற்றும் அவரோடு கட்டாரில் இருந்த சகோதரர்கள் அனைவரும் கேட்டுக்கொள்கின்றார்கள்.
.jpg)
inna lillahi wa inna ilahi rajiun
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteவல்ல ரஹ்மான் அன்னாரின் பாவங்களை மன்னித்து, அருள்புரிவானாக. சுவனத்தை அவரின் தங்குமிடமாக ஆக்குவானாக. அவரின் குடும்பத்தினருக்கு பொருமையை நல்குவானாக.
ஆழ்ந்த அனுதாபங்கள் இவர் ஒரு சிறந்த மனிதர் மட்டுமல்ல எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர்.துயருற்றிருக்கும் இவர் குடும்பத்திற்கு இறை ஆறுதல் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்
ReplyDelete