Header Ads



பரபரப்பு அரசியல் செய்திகள் சில...!

(நஜீப் பின் கபூர்)

தற்போது எதிர்க் கட்சி வேட்பாளரை இனம்காணும் நடவடிக்கைகளில் எதிரணிச் செயல்பாட்டாளர்கள் மின்னல் வேகத்தில் தொழில் பட்டு வருகின்றார்கள். சந்திரிக்க பண்டாரநாயக்க இதில்  முக்கிய பங்காற்றி வருகின்றார். இந்த நிலையில் பொது வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜெயசூரியவின் பெயர் ஒரு கட்டத்தில் பல மாக அடிபட்டது. 

அந்தச் சந்தர்ப்பத்தில் தான் எக்காரணம் கொண்டு கருவைப் பொது வேட்பாளராக ஏற்றகப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்ஹவிடத்தில் தெரிவித்து விட்டார். எனவே ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யார் களத்திற்கு வந்தாலும் அவருக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு நிச்சயம்.

அவசர அவசரமாக காரியம்
பார்க்க என்னாள் முடியாது..! 
நிறைவேற்று அதிகரமுள்ள ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போது நாட்டில் பொதுவாக கோரிக்கையாக இருந்து வருகின்றது. என்றாலும் கண்டி - கொழும்பு அதிவேக பாதைக்கான அடிகல் நாட்டு விழா கலகெதரையில் நடந்த போது தற்போது அவசரத்தில் தன்னால் இதனை செய்ய முடியாது. அவசரத்தில் இது விடயத்தில் காரியம் பார்த்தால் தப்பு நடந்து விடும் என்று இதற்கு ஜனாதிபதி மஹிந்த வேறு விளக்கம் கொடுத்திருக்கின்றார்.

சிராணி - சுனேத்ரா 
பொது வேட்பாளர்?
பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பான மர்மம் தொடர்ந்தாலும் தற்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்ஹவின் சசோதரி சுனேத்ராவின் பெயரும் தற்போது உச்சரிக்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவரைக் களத்தில் இறக்கினால் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களைத் தன்பக்கம் ஈர்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. 

அடுத்து சர்ச்சைக்குரிய விதத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட  முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவும் பொறுத்தமான நல்ல வேட்பாளர் என்று தற்போது பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மங்கள ஜனாதிபதிக்கு 
விருந்து போட்டது ஏன்?
சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாகவும், தற்போது மக்கள் மத்தியில் பெரும் அரசியல் கோமாளியாகவும் பேசப்படுகின்ற மங்கள சமரவீர தனது மொரட்டுவை வீட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராப்போசன விருந்தொன்றை வழங்கி இருக்கின்றார். 

நாமல் சகிதம் இந்த விருத்தில் ஜனாதிபதி மங்களவில் வீட்டில் விருந்துண்டு பழைய அனுபவங்கள் தொடர்பாக பேசி மகிழ்திருப்பதுடன். தனது கோரிக்கைகள் தொடர்பாகவும் மங்கள ஜனாதிபதியிடத்தில் அங்கு வினாவி இருக்கின்றார். அப்போது இது விடயமாக பசிலுடன் பேசிக் கொள்ளுமாறு கூறி நலுவி இருக்கின்றார் பெரியவர்.

சோபித தேரருக்கு இரு 
முனைகளில் அழுத்தம்!
தனக்கு ஏன் இப்படித் தொந்தரவு கொடுக்கின்றீர்கள்? எனக்கு இன்னும் ஆறு மாதங்கள் தாருங்கள். நான் உங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்பக் காரியம் பார்க்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது வேட்பாளர் விடயத்திலும் அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான கதாநாயகனாகக் காரியம் பார்க்கின்ற மாதுவாவே சோபித தேரரிடம் மண்றாடி இருக்கின்றார். 

தனக்கு இது விடயத்தில் தனித்து பதில் தர முடியது எனது சகாக்களுடன் பேசி விட்டுத்தான் இதற்குப் பதில் தர முடியும் என்று ஜனாதிபதியிடத்தில் கூறி இருக்கின்றார் தேரர். அத்துடன் இரத்த அழுத்தம் அதிகரிப்பால் தற்போது சோபித தேரர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

தொலைபேசி அழைப்பால் 
ரணில் அதிர்ச்சியடைந்தார்
தூய்மையான நாளைக்கான அதுருலியே ரதன தேரரின் கூட்டம் முத்தையா அரங்கில் நடந்து கொண்டிருந்த வேளை, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்ஹவுக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பால் மனிதன் அதிச்சியடைந்தார். மறு முனையில் அவருடன் தொடர்பு கொண்டவர் ஐக்கிய தேசியக் கட்சி பௌத்த குருமார்கள் அமைப்பில் தலைவர் ஆனந்த கிராபே தேரர். 

பொது வேட்பாளராக கருவை நீங்கள் அறிவிக்க வேண்டும். அல்லது இது தொடர்பாக நாம் இன்று பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றைப் போட்டு இந்த Nலையைப் பார்ப்போம் என்று தேரர்   பிளேக்மேல் பண்ண, மேடையில் அமர்ந்திருந்த கருவைப் பார்த்த ரணில் என்ன இது நீங்கள் பொது வேட்பாளர் என்று ஆனந்த தேரர் அறிவிக்கப் போவதாகக் கூறுகின்றாரே என்று கடுப்பில் கேட்க எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று ரணிலிடத்தில் கூறி இருக்கின்றார் கரு. எப்படியோ இந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தை ரணில் தடுத்திருக்கின்றார்.  இதுதான் ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் நிலை. 

ஓய்வூதியக் காரர்களுக்கு 
கையடக்க தொலைபேசி

தற்போது ஜனாதிபதி தனது கண்டி வாசஸ்தளத்தில் தங்கி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றார். ஓய்வூதியக்காரர்களுக்கு இலவசமாக  ஜனாதிபதியின் கரங்களால் கையடக்கத் தொலைபேசி வழங்கப்பட இருக்கின்றது என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவ பிரதேச செயலகங்கள் ஊடாக அதற்கான பட்டியலும் உடனடியாகத் தயாரிக்கப்பட்டது. 

இதனைப் பெற்றுக் கொள்ள கடந்த வெள்ளி காலை 11 முதல் இரவு 8 மணி வரையும் மாத்தளை நுவரெலிய, கண்டி ஆகிய இடங்களில் இருந்து வந்த ஓய்வூதிக்காரர்கள் கண்டிக்கு வந்திருந்தார்கள். ஜனாதிபதியின் கரத்தால் கையடக்கத் தொலைபேசியைப் பெற்றுக் கொள்ள முனைந்தாலும் ஜனாதிபதி குறிப்பட்ட நேரம் வரை கூட்ட மண்டபத்திற்கு சமூகம் தரவில்லை. 

சொல்லப்பட்ட படி மாலை 4 மணிக்கு ஜனாதிபதி அங்கு வராவிட்டாலும் தொலைவில் இருந்த வந்தவர்களுக்கு குறிப்பிட்ட நிறுவனம் கையடக்கத் தொலைபேசிகளை வழங்கி கொண்டிருந்ததை அங்கு பார்க்க முடிந்தது. தேசிய ஆள் அடையாள அட்iயும் ஓய்வூதிய அட்டையை சமர்பித்து எப்போது வேண்டுமானாலும் மொபிடல் நிறுவனத்தில் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அங்கு கூறப்பட்டது. 

ஹெல உறுமயவை நம்பி 
காரியம் பார்க்க முடியுமா?
ஹெல உறுமயவின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்று தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ பகிரங்கமாக அறிவித்து விட்டார். எனவே இந்த அமைப்பினர் ஏற்கெனவே மேடைகளில் கர்ச்சித்தது போல் இப்போது பொது வேட்பாளர் சார்ப்பில் களத்தில் குதிப்பது மட்டுமே எஞ்சி இருக்கின்ற ஓரே பணி. ஆனால் இந்த பணியை எந்தளவுக்கு அந்த அமைப்பு முன்னெடுக்கும் என்ற விடயத்தில் நிறையவே சந்தேகங்கள் தோன்றி இருக்கின்றது. அந்தளவுக்கு அந்த கட்சி முக்கியஸ்தர்களுக்குத் தற்போது மேல் மட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிகின்றது.

No comments

Powered by Blogger.