Header Ads



பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா நியமனம்

(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

எதிரணி கட்சிகளின் பொது வேட்பாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை எதிரணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியொன்றின் தலைவர் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கையடக்க தெலைபேசி மூலமாக கூறினார்.

இந்த தீர்மானத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அதற்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் பூரண ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

21-11-2014 அன்று நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் கூறினார்.

4 comments:

  1. Should be as a muslim we have to support him.mahinda&co send to home.

    ReplyDelete
  2. Please send Mahinda & Co to home

    ReplyDelete
  3. i think CON>MINISTER MITHIRIPALA SRISENS is the best candidate for this critical situation in srilanka

    ReplyDelete

Powered by Blogger.