Header Ads



இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம், ராஜபக்ஷவுக்கு எதிராக மைத்திரிபால..!


(நஜீப் பின் கபூர்)

தற்போது நமக்குக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பான செய்திகளை நமது வாசகர்களுக்குத் தெரிவிப்பதற்கு முன்னர் கடந்த வாரம் நாம் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் சொல்லி இருந்த ஒரு குறிப்பை நமது வாசகர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த வேண்டும் என்பதற்காக அதனையும் இங்கே பதிகின்றோம்.

அதனையும் ஒரு முறை நமது வாசகர்கள் படித்துவிட்டு புதிய செய்தி தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.

ராஜபக்ஷவுடன் கோதாவுக்கு வருவது தொடர்பாக சந்திரிகா, சிரிசேன, சோபித, அர்ஜூன, கரு போன்றவர்களின் பெயர்கள் தற்போது உச்சிரிக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே சந்திரிக்க போன்ற ஒரு செல்வாக்கான வேட்பாளர் களத்தில் குதித்தால் மட்டுமே இந்தத் தேர்தலில் வலுவான ராஜபக்ஷாவுக்கு சவால் விடுக்க முடியும். 

சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிரிசேனாவின் பெயரும் இந்த பொது வேட்பாளர் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகின்றது. எனவே இந்த கதை யதார்த்தமானால் சந்திரிகா பண்டாரநாயக்க பொது வேட்பாளராக வருவதை  விட இது ராஜபக்ஷக்களுக்கு பேரதிர்ச்சியான செய்தியாக அது அமைய முடியும். 

இது விடயமான கடந்த வியாழன் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மைத்திரிபல சிரிசேன கொடுத்த பதிலும் ஒழு மழுப்பலாக இருந்தது என்றுதான் அவதானிக்க முடிந்தது.

கடந்த வாரம் எந்தவொரு ஊடகமும் இப்படி ஒரு செய்தியைப் பதிந்திருக்க வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. எனவே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் நேற்று அறிவிக்கப்பட இருந்தாலும்  அது ஒரு நாள் தாமதமானதற்குக் காரணம் மைத்திரிபல விவகாரம் என்ற எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றது.

இன்று ஆளும் தரப்பில் இருந்து பதவி விலகிய பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க நாளை மலரப்போகும் மைத்திரியான தேசம் பற்றிச் செய்த அறிவிப்பு இதனை உறுதி செய்கின்றது. 

இந்த வசந்த சேனாநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த கொண்டார் என்பதும் குறிப்படத்தக்கது.

http://www.jaffnamuslim.com/2014/11/blog-post_371.html


No comments

Powered by Blogger.