நீண்ட நேரம் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், பல விடயங்கள் ஆராய்வு
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்மானம் நேற்று இரவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின் போது கட்சியின் சிரேஸ்ட தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த ராஜபக்சவின் பெயரை பிரோரித்தார்.
அதனை மற்றும் ஒரு சிரேஸ்ட தலைவரான டி எம் ஜெயரத்ன வழிமொழிந்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை இன்று 20 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிடுவதற்கு அரசாங்கம் நேற்றிரவு தீர்மானித்ததாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே ஆளும் கூட்டணியின் வேட்பாளர் எனவும் நேற்றைய சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தமுக்கியஸ்தர் கூறினார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கீகாரத்தை பெறுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிடவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தின்போது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது நீண்டநேரம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இறுதியில் இன்று அறிவித்தலை வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் குறுகிய நேரத்தில் முடிந்துவிட்டதாகவும் அதன் பின்னர் உடனடியாகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பித்துவிட்டதாகவும் அரசாங்கத்தில் அங்கம் வகி்க்கும் பங்காளிக் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.
அந்தவகையில் மிக நீண்டநேரம் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தின் போது பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் கலந்துரையாடல்கள் நீண்டுகொண்டே சென்றதாகவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ குறிப்பிடுகையில்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஆளும் கூட்டணியின் வேட்பாளர் எனவும் நேற்றைய சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அங்கீகரிக்க நாளை ( இன்று) ஐககிய மக்கள் சுதந்திர முன்னணியின் பஙகாளிக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.
இதேவேளை ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் உதண கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பிலும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழுக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
இது இவ்வாறு இருக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. எனினும் நேற்றைய கூட்டத்தின் பின்னர் இன்று வௌ்ளிககிழமை நண்பகல் 12 மணிக்கு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொள்ளும். தேர்தல் திணைக்களத்துக்கு வர்த்தமானி அறிவித்தல் கிடைத்ததும் தேர்தல் திணைக்களம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் நாட்டின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலே நடைபெறவுள்ளது. முதலாவது ஜனாதிபதி தேர்தல் கடந்த 1982 ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது தேர்தல் 1988 ஆம் ஆண்டிலும் மூன்றாவது ஜனாதிபதி தேர்தல் 1994 ஆம் ஆண்டிலும் நான்காவது ஜனாதிபதி தேர்தல் 1999 ஆம் ஆண்டிலும் ஐந்தாவது ஜனாதிபதி தேர்தல் 2005 ஆம் ஆண்டிலும் ஆறாவது ஜனாதிபதி தேர்தல் 2010 ஆம் ஆணடிலும் நடைபெற்றன.
இதற்கு முன்னர் ஜே.ஆர். ஜயவர்த்தனஇ ஆர். பிரேமதாசஇ டி.பி. விஜேதுங்கஇ சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இஆகியோர் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக பதவி வகித்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்து வருகின்றார். 2005 ஆம் ஆண்டு முதலாவது தடவையாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான நான்கு வருடங்கள் நேற்று 19 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்தே நேற்று நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
அதன்படி எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வர்த்தமானி அறிவித்தல் இன்று மாலை தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பப்படும் பட்சத்தில் இன்றைய தினத்திலிருந்து 16 நாட்களின் பின்னர் வேட்பு மனுத் தாக்கலுக்கான திகதிகள் அறிவிக்கப்படும். அதாவது வர்த்தமானி ாக்கலுக்கான திகதிகள் அறிவிக்கப்படும். அதாவது வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி 16 தினங்களின் பின்னரும் 30 நாட்களுக்குள்ளும் வேட்பு மனுத் தாக்கல் இடம்பெறவேண்டும். அதனை தாண்டிச் செல்ல முடியாது.
அத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்களின் பின்னரான ஒரு நாளில் தேர்தல் நடைபெறும் திகதி இருக்கவேண்டும். அதாவது 30 நாட்களின் பின்னரும் 60 நாட்களுக்குள்ளும் தேர்தல் நடத்தப்படவேண்டும். 60 நாட்களை தாண்டிச் செல்ல முடியாது. அந்தவகையில் ஜனவரி மாத முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
.jpg)
Post a Comment