''ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தொடர்பில், எவ்வித பொறுப்புக்களையும் ஏற்கமுடியாது''
ஜாதிக ஹெல உறுமயவின் வழியை தாம் பின்பற்றப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசி;ங்க தெரிவித்துள்ளார்
தமது யோசனையை அரசாங்கம் நிறைவேற்றாமை காரணமாகவே ஜாதிக ஹெல உறுமய நேற்று அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொண்டது.
இந்தநிலையில் சிறந்த நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் தாம் அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு கடிதம் அனுப்பி பல மாதங்களாகியும் அரசாங்கத்திடம் இருந்து பதில் இல்லை என்று விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தொடர்பில் தம்மால் எவ்வித பொறுப்புக்களையும் ஏற்கமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் தமக்கு எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை. அவர் நல்ல மனிதர். எனினும் அவரை சுற்றியுள்ளவர்கள் மோசமானவர்களாவர்கள் என்று விஜேசிங்க கூறினார்.
எனினும் தாம் கட்சி மாறப் போவதாக வெளியான தகவலை அவர் மறுத்தார்.

Post a Comment