Header Ads



ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு - இன்று நள்ளிரவுக்கு பின்னர்


அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று 19-11-2014 நள்ளிரவுக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்று இன்று  நள்ளிரவுடன் 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்த நிலையில், இன்று நள்ளிரவுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படாத நிலையிலும் ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் சட்ட விரோத பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். இதன்ஒரு பகுதியாக அரசாங்க பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கத்தில் பலவந்தமாக பதியும் நடவடிக்கையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

    ஆளும்கட்சியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் நியமனங்களை பெற்ற கல்வி அதிகாரிகள் பசில் சார்பில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் நாடளாவிய ரீதீயில் பல பாடசாலைகளுக்கும் சென்று அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிதாஸ் குரு சங்கமயவில் இணைந்துகொள்ளுமாறு வற்புறுத்திவருகின்றனர்.

    இவ்வாறு குறிப்பிட்ட சங்கத்தில் இணைய மறுக்கும் ஆசிரியர்களின் பெயர்விபரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், மேலும் சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கத்தில் இணைந்துகொண்டாலே 2015 வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ReplyDelete

Powered by Blogger.