Header Ads



பாரிய கற்பாறையை அசைத்தாலும், மஹிந்தவை அசைக்க முடியாது - அஸ்வர்

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். 

நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?

சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார்.

மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது.

மைத்திரிபாலவின் நடவடிக்கை பாரியளவிலான துரோகமாகும்.

சர்வதேச சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதனை ஜனாதிபதி அம்பலப்படுத்தினார்.

கடந்த சில தினங்களில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் பற்றி நாட்டுக்கு தெரியப்படுத்துவோம்.

பாரிய கற்பாறையை அசைத்தாலும், மெதமுலனவில் வீற்றிருக்கும் ஜனாதிபதியை அசைக்க முடியாது என அஸ்வர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. அல்லாஹ்வை மறந்த பேச்சுக்களையும், அல்லாஹ்வின் இல்லங்களை இடித்தவர்களையும் அவனே பார்த்துக்கொள்வான், எமது பிரார்த்தனைகள் இறைவனிடத்தில் எப்போதும் வீணாகிவிடாது என்ற நம்பிக்கை உள்ளது.

    ReplyDelete
  2. helo sedi aswer iniyaawathu waaya poththittu iru unnaala muslimkalukku maanakkedu

    ReplyDelete
  3. தன் வாழ்நாளின் பிற்பாதியை (பள்ளிவாசல்களை உடைத்துவரும் ஆட்சியாளர்களின்) பாதங்களை வருடியபடி இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு துரோகமிழைத்து வாழ்ந்து வருபவர்தான் இதைக் கூறுகின்றார் பாருங்கள்!

    ReplyDelete
  4. podaaaang.............goyya

    ReplyDelete
  5. Enough ......enough.....this is the end of your political life

    ReplyDelete
  6. பரவாயில்லையே அஸ்வருக்கு இடப்பட்ட கருத்துக்கள் ஓரளவு, ஜப்னா முஸ்லிம் பதிவேற்றியுள்ளதே. எதிர்கட்சிகள் பலமாயுள்ளதும். ஆழும் கட்சியின் டங்குவார் அந்துள்ளது இதில் இருந்து புரிகின்றது.

    ReplyDelete
  7. அட விடுங்கப்பா வயது போயிடுச்சி வயிற்றூப்பொழப்புக்கு இனி எங்க போவது அதுதான் கை நீலாமல் வாய் நீலுது பிச்சை எடுப்பவர் கையில் ஏதாவது இருக்குமே இவர் கையிலும் ஒன்ரு இருக்கு பாருங்க.........காட்டிநாதான் கிடைக்குமே.................

    ReplyDelete

Powered by Blogger.