ரணில் விக்கிரமசிங்கவுக்கு வீட்டில் ஒரு மைத்திரி, வெளியில் ஒரு மைத்திரி - மஹிந்த
ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது வீட்டில் ஒரு மைத்திரியும் வெளியில் ஒரு மைத்திரியும் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ரணிலின் மனைவி மைத்திரியையும் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் முன்னிறுத்தி இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை அந்தக் கட்சி தெரிவு செய்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவதை போன்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, 2010ல் சரத் பொன்சேகா சென்ற நிலைமைக்கு செல்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் தற்போது மக்கள் முன்வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

இது மிகவும் கீழ்தரமான பேச்சு. தனக்குப் போட்டியாக களமிறங்கியிருப்பவரை அவரது கொள்கை ரீதியாக விமர்சித்து தனது கொள்கைகளின் சிறப்பை மக்களுக்குப் புரியவைப்பதை விட்டு விட்டு இப்படி சேறுபூசுவதிலிருந்தே மைத்திரியின் உருவாகிவரும் பலம் புரிகின்றது.
ReplyDeleteதன்னை பொதுவேட்பாளராக அறிவித்துக் கொள்ளும் உரையில், இன்றைய ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத்தை விமர்சித்து மைத்திரி எத்தனை கண்ணியமாக உரையாற்றினார் என்பதை நினைக்கும்போது ஜனாதிபதியின் இந்தப் பேச்சு எத்தனை கண்'ணியக்குறைவானது என்பதை அறியலாம்.
புதிய மாற்றங்களின் தேவை இன்று எல்லோராலும் உணரப்பட்டுள்ளது. நேர்மையான தேர்தல் மூலம் சிறந்த தலைவர்கள் நமது மக்களுக்கு கிடைக்க வேண்டும்.