மஹிந்த ராஜபக்ஸவுக்கு இன்று ''69''
69 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி இன்று 18-11-2014 நாடெங்கிலும் மத வழிபாடுகள் இடம்பெறுகின்றன.
கிறுவாபத்துவ மெதமுலனை கிராமத்தில் பிறந்த மஹிந்த ராஜபக்ஷ அவரது தந்தையாரான டீ. ஏ. ராஜபக்ஷவின் அடியொட்டி 1970 ல் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க் கட்சித் தலைவராக பிரதமராக பல பதவிகளை வகித்து பின்னர் 2005 ஆம் ஆண்டில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அவர். தனது பிறந்த நாளில் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

ஹம்பாந்தோட்டை மக்கள் குடிக்க நீர் இன்றி அவதி
ReplyDelete[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 02:33.53 AM GMT ]
ஹம்பாந்தோட்டை மக்கள் குடிக்க நீர் இன்றி அவதியுறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளாக ஹம்பாந்தோட்டை மக்கள் குடிக்க நீர் இன்றி சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
எனினும், பிரதேச மக்களின் குடி நீர் தேவை இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த அரசாங்கத்தின் பலம்பொருந்தியவர்கள் ஹம்பாந்தோட்டையில் இருக்கின்றார்கள்.
எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் இருந்தாலும் பிரதேச மக்களுக்கு குடிநீர் இல்லையென்றால் அவர்களில் என்ன பயன்?
அப்பாவி மக்களுக்கு பவுசர்கள் மூலம் தண்ணீர் வழங்க வேண்டியேற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் முதலாவதாக ஹம்பாந்தோட்டை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்.
விமானங்களில் ஏறி விடுமுறையை கழிப்பதற்கோ அல்லது கப்பல்களில் ஏறி சுற்றுலா செல்வதற்கோ கூடிய விவசாயிகள் எவரும் ஹம்பாந்தோட்டையில் இல்லை.
இந்த விவசாயிகளுக்கு குடிநீரே அவசியமாகின்றது.
இந்த மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நீர் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இந்தக் குற்றச்சாட்டுக்களை சஜித் முன்வைத்துள்ளார்.