Header Ads



கட்டாருடன் 3 முஸ்லிம் நாடுகளுக்கு லடாய்...! இஹ்வானுல் முஸ்லிமின் காரணம்..?


கட்டாருக்கான தமது தூதுவர்களை திரும்ப அனுப்பு வதற்கு சவு+தி அரேபியா, பஹ்ரெய்ன்; மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இணங்கியுள்ளன.  தமக்கு இடையிலான உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற ஒப்பந்தத்தை மீறிச் செயல்படுவதாக கட்டார் மீது குற்றம் சுமத்திய இந்த மூன்று நாடுகளும் எதிர்பாராத விதமாக கடந்த மார்ச்சில் தமது தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்டன.

சவ+தி அரேபியாவில் கடந்த ஞாயிறன்று பதற்றத்தை தணிக்கும் வளைகுடா நாடுகளின் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னரே தூதுவர்களை திரும்ப அனுப்புவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸில் நாடுகளுக்கு இடை யில் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இணக்கம் எட்டப்பட்டது என்று அந்த அமைப்பின் உத்தியோகபு+ர்வ இணையத்தளத்தில் அறிவிக்கபட்டுள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு ஞாயிறன்று வெளி யிட்ட செய்திக் குறிப்பில், "ஆழமான அடித்தளத்தை ஏற்படுத்தும் வாக்குறுதியுடன் ஒரு புதிய பக்கம் திறக்கப் பட்டுள்ளது. குறிப்பாக பிராந்தியத்தில் தற்போதிருக்கும் உணர்வுபூர்வமான விடயங்களை தணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது" என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கட்டார் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவளிப்பதாக சவு+தி அரேபியா, பஹ்ரெய்ன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் குற்றம் சாட்டுகின்றன. தாம் சகோதரத்துவ அமைப்புக்கு மாத்திரமன்றி அனைத்து அரபு மக்களுக்கும் ஆதரவளிப்பதாக கட்டார் குறிப்பிடுகிறது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பிராந்தியத்தின் முடியாட்சியை கவிழ்க்க சதி செய்வதாக குற்றம் சுமத்தும் சவு+தி அரேபியா அதன் மீது தடை விதித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் சகோத ரத்துவ அமைப்புக்கு கடந்த ஞாயிறன்று தீவிரவாத மத்திரை குத்தியது.

No comments

Powered by Blogger.