ஜனாதிபதிக்கும், மு.கா.க்கும் 30 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பு - பசிலுடன் சந்திப்பு தொடரும் (படம் இணைப்பு)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று 29-11-2014 மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
30 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், அடுத்தகட்ட நடவடிக்கையாக எதிர்வரும் சில தினங்களில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் மீண்டும் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள பிரதான நிபந்தனைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் பின்னர் கிடைக்கப்பெறும் சாதக பாதகங்களை கொண்டேன் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளுமென கட்சியின் செயலாளர் ஹசன் அலி, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்
ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் எம்;.பியுமான ஹசன் அலி மற்றும் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஜனாதிபதியுடன், அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ஷமற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் பங்கேற்றனர்.

சூட்கேஸ் ?
ReplyDeleteThey had discussed only how many millions.
ReplyDeleteonly for cash
ReplyDeleteThe raise the issue against Rauf Hakeem, now he want to save his life, Hakeem trying his best level to support to Government to save his head. but Muslim Umma already decided to whom we need to support. if a muslim really muslim they never support this government. bcos only this government raise many issue against muslim and demolish many Masjid
ReplyDeleteஹகீம் அவர்களே! முஸ்லிம்கள் முடிவெடுத்து விட்டார்கள்..., இந்த முறை ஏமற்ற முடியாது ..., முஸ்லிம்களின் எதிரி உங்களுக்கு நண்பன் ...,அல்லாஹ்வை நம்பியவர்களை அவன் கைவிடமாட்டான் ..., திருத்துங்கள் ..., எந்த இடத்தில் நீங்கள் கேட்டாலும் படு தோல்வி நிச்சயம்..., இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteரேட்டு படியல போல இருக்கு, அதான் பசிலுடன் பேச போறாங்க, மறந்திராம குமாரி குரே வழக்கையும் சேர்த்து பேசுங்க, அதுவேற தலைக்கு மேல தொங்கின கத்திகணக்கா இருக்கு.
ReplyDeleteiwarhalukku iraywen wetkaththai padaykawillayo theriyazu.
ReplyDeleteமுழுமையான கரையோர மாவட்டம் தான் இப்போது வேண்டுமா? முஸ்லிம்களைக் கொன்று குவிக்க திட்டமிட்டிருக்கும் கயவர்களோடு ஒன்றினைந்திருக்கும் மகிந்தவுடன் என்ன பேச்சுவாத்தை?
ReplyDeleteverhal tirunta Maaattarhal Innum Avanodu Yenna Pesa Poninga Avan Yemaku Seitathu Potathaaaaaa?????? If U Joint With Mahinda Please Don't Come To Eastern Site For Vote
ReplyDelete