ISIS இல் தலிபான்கள்...?
இராக், சிரியா நாடுகளில் இயங்கி வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) படையில் சேர்ந்து போராட பாகிஸ்தான் தலிபான்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு கூறியுள்ளது.
ஐ.எஸ். கள் இராக், சிரியா ஆகிய நாடுகளில் கணிசமான பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேசப் படை வான்வழித் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு, ஐ.எஸ்.ஸýக்கு உலகிலுள்ள அனைத்து ஜிஹாதி அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு கூறியுள்ளது.
இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாஹிதுல்லா ஷாஹித் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அதன் விவரம்:
இராக், சிரியாவில் ஜிஹாத் போராட்டம் தொடங்கியபோது, ஐ.எஸ். என்ற இயக்கம் இருக்கவில்லை. அந்த நாடுகளிலுள்ள முஜாஹிதீன்களுக்கு நாங்கள் உதவி செய்து வந்துள்ளோம். இதுவரை 1,000 முதல் 1,500 பேர் வரை பாகிஸ்தான் தலிபான்கள் அங்கு போராடி வருகின்றனர்.
ஐ.எஸ்.ஸýக்கு உதவ மேலும் தலிபான்களை அனுப்புவோம். ஐ.எஸ்.ஸýக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. அவர்கள் எங்கள் சகோதரர்கள். இராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஜிஹாதி இயக்கங்கள் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று அவர் கூறினார்.
தங்கள் நாட்டைச் சேர்ந்த எவரும் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து இராக், சிரியாவில் போராடவில்லை என்று பாகிஸ்தான் அரசு கூறிவரும் நிலையில், தெஹ்ரிக்-ஏ-தலிபான் இவ்வாறு கூறியிருக்கிறது.

Post a Comment