Header Ads



பாகிஸ்தான் ராணுவத்தின் பொறுமையை சோதிப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் - முஷாரப்

பாகிஸ்தான் ராணுவத்தின் பொறுமையை சோதிப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக "எக்ஸ்பிரஸ் நியூஸ்' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியாதான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது, இப்பிராந்தியத்துக்கு நல்லதல்ல. பாகிஸ்தான் ராணுவத்தின் பொறுமை, சகிப்புத் தன்மையை சோதித்துப் பார்ப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், பாகிஸ்தான் படையினர் கடந்த சில நாள்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் முஷாரஃப் இவ்வாறு பேசியுள்ளார்.

No comments

Powered by Blogger.