Header Ads



சவூதி அரேபியாவிலிருந்து, இலங்கைக்கு வரவேண்டியவர் விமானத்தில் மரணம்

சவூதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கவிற்கு வருகை தந்த விமானமொன்றில் இருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷிய பிரஜை ஒருவரே விமானத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த விமானம் 12-10-2014 இன்று முற்பகல் 10.20க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.