Header Ads



எதிர்க்கட்சிகள் யாவும் சேருமானால், ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும் - ஆசாத் சாலி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்பதில் எதுவித சந்தேகமில்லை. ஊவா மாகாண சபைத் தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் யாவும் ஒன்று சேருமானால் வெற்றி பெறுவது மிகச் சுலபமாகும்.    ஏன்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆசாத் சாலி குறிப்பிட்டார் 

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

நாட்டில் கடும்போக்கு சக்திகள் முஸ்லிம்கள் மீது முன்னெடுக்கும் அட்டுழியங்களை நிறுத்த  வேண்டும். ஜனாதிபதி பாப்பரசரை சந்திக்கச் செல்கின்றாhர் ஆனால் இங்கு என்ன நடக்கின்றது. 

அரசாங்கம் ஊவாவில் 69 ஆயிரம் வாக்குளால் வெற்றி பெற்றது. இவ்வாக்குகளை ஐயாயிரம் ரூபா வீதம் விநியோகித்து   பெற்றுக் கொண்டது. ஆனால்  147 ஆயிரம்  வாக்குகளை  எதிர்த்தரப்பு பெற்று வெற்றி பெற்றுள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் யாவும் ஒன்றுபட்டால் வெற்றி பெற முடியும்.  ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப முடியும். 

ஜனாதிபதி மூன்றாம் முறை போட்டியிட முடியாது என்று சரத்  என் சில்வா கூறுகின்றார். ஆனால் எமக்கு  ஆணையாளர் மீது நம்பிக்கையில்லை. இந்நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லை. நாட்டில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு , சுயாதீன் நீதி ஆணைக்குழு என்பன உட்பட சகல சுயாதீன ஆணைக்குழுக்களையும் உடனடியாக ஆரம்பிக்க  வேண்டும். இதன் மூலம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும்.  காலி வீதி நான்கு முறை நவீனமயப்படுத்தப்டப்டது. இதற்கு பல கோடி ரூபா பணம் செலவிடப்படுகின்றது. இதற்குரிய பணத்தின் மூலம் மொனராகலை மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும். 

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல பிரதேச சபை தலைவர்களை அழைத்து அலரி மாளிகையில் கூட்டம் நடாத்துகின்றனர். நாட்டில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் அரசாங்கம் தேர்தலுக்குத் தயாராகுகின்றது. தேர்தல் அலுவலகமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாண சபை உறுப்பினர்களையும் அழைத்து அவசர அவசரமாக கூட்டங்கள் நடாத்துகின்றனர். இவையெல்லாம் இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகும்.  ஒரு மாகாண சபை  உறுப்பினருக்கு பத்து  மில்லியன் வழங்கப்படுகின்றது. இந்த பணத்தை  விரும்பியவாறு செலவழிக்க முடியும். இத்தகைய  மாகாண சபையை   ஜே.ஆர் ஜெயவர்தன இதற்காகவா உருவாக்கினார். இவற்றுக்கு  ஒரு நாள் பதில் சொல்ல வேண்டி ஏற்படும். அமைச்சு செயலாளர்களும் பதில்  சொல்ல வேண்டி ஏற்படும். அத்துடன் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்களும் இதனை நன்கு புரிந்து கொள்ள வே;ணடும். 

ஊவாவில் ஹரீன் பெர்னாண்டோவை பார்த்து பயந்தாhர்கள். இதனால் மின்சாரக் கட்டணம் குறைக்கபடும் வேண்டும் என்றனர். ஆனால் மின்சாரக் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டதா?

நான் அமெரிக்க தூதுவரை கண்டியில் சந்தித்து  என்ன கதைத்தேன் என்று ஊடகங்கள் அடிக்கடி என்னிடம் வினவி வருகின்றன. இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள்  பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள் வியாபார நிலையங்களுக்கு மேற்கொள்ளும்  தாக்குதல்கள் மற்றும் தேவாலயங்கள் தாக்கப்படுவது குறிப்பாக  சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளபடும் துன்புறுத்தல்கள் என்பவற்றை எடுத்துக் கூறினேன். 

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் பற்றி கதைக்கப்படுகின்றது. ஊவாவில் அரசாங்கம் வாக்குறுதிகளை அள்ளி வீசி , நிவாரணங்களை வழங்கி , பணத்தை அள்ளி வீசி வீடு வீடாகச் சென்று  69 ஆயிரம் வாக்குகளை மட்டும் மேலதிகமாகப் பெற்றுக் கொண்டது. 

இத்தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் யாவும் ஒரணி சேருமானால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதில் எதுவித சந்தேகமில்லை.   

No comments

Powered by Blogger.