Header Ads



ஆங்கில தினப் போட்டியில், தேசிய மட்டதிற்கு தெரிவு


(சுலைமான் றாபி) 

அண்மையில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டியில் (English Day) நிந்தவூர் மினா பாடசாலையில் தரம் 08இல் கல்வி பயிலும் மாணவி செல்வி எம்.ஜே. பாத்திமா ஷிம்றா கிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியில் பங்கு பற்றி 02ம் இடத்தினைபெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். மேலும் ஆங்கில தினப்போட்டியில் இம்மாணவி கோட்டம், வலையம் மற்றும் மாவட்ட மட்டங்களில் முதல் இடத்தினைப்பெற்று மாகாண ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்காக  இம்மாணவியைப் பாராடி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 2014.10.09ம் திகதி வியாழக்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். நிஹார்டீன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு கெளரவமளித்தனர்.      

இதேவேளை இந்த ஆங்கில தினப் போட்டியின் தேசிய மட்டப் போட்டிகள் எதிர்வரும் 11.10.2014ம் திகதி சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 




No comments

Powered by Blogger.