ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு, இடதுசாரிக் கட்சிகள் மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலை சில மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர, இலங்கை சமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரண மற்றும் ஜனநாயக இடதுசாரிகள் முன்னணி தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2016 நவம்பர் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், தற்போது தேர்தலுக்கு செல்வது அவசியமில்லாத செயற்பாடு என அவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் விடுக்கப்படலாம் என செய்திகள் வெளியாகும் நிலையிலேயே இடதுசாரிக் கட்சிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

Post a Comment