ஹம்பாந்தோட்டையில் கடத்தப்பட்ட மணமகள், அடர்ந்த காட்டுப்பகுதியில் மீட்பு
-Vi-
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் கடத்தப்பட்ட மணமகள் ஒருவர் யால காட்டில் மரத்தின் மீதேறி மறைந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மணமகள் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையமொன்றில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இந்த யுவதிக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்துள்ளது. எனினும் அவர் இத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை குறித்த யுவதியை இளைஞர்கள் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளார். அவரைக் கடத்திய வான் மற்றும் சாரதியை திஸ்ஸமகாராமை பிரதேசத்தில் வைத்து அன்றிரவே பொலிஸார் கைது செய்திருந்தனர்.எனினும் யுவதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். யால வனாந்திரத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் வேப்பம் மரமொன்றின் மீதேறி மறைந்திருந்த நிலையிலேயே அவர் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞனும் அப்பகுதியிலிருந்து சற்றுத்தள்ளி மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment