'சுதந்திர கட்சி' ஒரு இனத்தவருக்கோ, மதத்தினருக்கோ வரையறுக்கப்பட்ட கட்சியாக செயற்படவில்லை - பசில்
சிறிலங்கா சுதந்திர கட்சி ஒரு இனத்தவருக்கோ அல்லது மதத்தினருக்கோ மாத்திரம் வரையறுக்கப்பட்ட கட்சியாக செயற்படவில்லை என அதன் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு கிழக்கிற்கான காரியாலயத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட தருணத்தில் இருந்து கிரமமான மேம்பாடுகள் காணப்பட்டுள்ளது.
சபாநாயகர் பதவி முதல் அமைச்சுப் பதவிவரை கிடைக்காத நிலையில் இருந்த சிறிலங்கா சுதந்திர கட்சி, 3 இல் 2 பெரும்பான்மை பலத்தை காலப்போக்கில் பெற்றுக்கொண்டது.
இதுதவிர, உள்ளுராட்சி மன்றங்களிலும் எந்தவொரு கட்சியும் பெற முடியாத அளவில் பெரும்பான்மை பலத்தை தமது கட்சி பெற்றுக்கொண்டதாக அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த, கடந்த ஜனாதிபதி தேர்தல்களை விட இந்த முறை தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு அதிகூடிய வாக்குகளை பெறுவார் என நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாதிபதியுடனும், அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடனும் இணைந்து இதுவரை எதிர்கொண்ட எந்தவொரு தேர்தலிலும் தமது கூட்டமைப்பு தோல்விகளை சந்திக்க வில்லை என அவர் தெரிவித்தார்.
.jpg)
Post a Comment