ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை, நவம்பர் மாதத்தில் கூறுவோம் - ரவூப் ஹக்கீம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று இதுவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கலந்தாராய்ந்துவருகின்றோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கலந்துரையாடல்களை நடத்திவிட்டே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்துக்கு வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்றுக்காலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்று கலந்துகொண்டிருந்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நிகழ்வின் இறுதியில் Viயிடம் தகவல் வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
'' முதலில் தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கே எங்களுக்கு பூரண உடன்பாடில்லை. தற்போதைய நிலைமையில் முதலில் பாராளுமன்றத் தேர்தல்தான் நடைபெறவேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். காரணம் தற்போதைய பாராளுமன்ற ஆசன சமன்பாடு நாட்டை உரிய முறையில் பிரதிநிதிதித்துவப்படுத்தவில்லை '' என்று அமைச்சர் தெரிவித்தார். அவருடனான குறுகிய நேர்காணல் வருமாறு
கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்கவுள்ளது?
பதில்: ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று இதுவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கலந்தாராய்ந்துவருகின்றோம். கட்சியின் அனைத்து மடடங்களிலும் கலந்துரையாடல்களை நடத்தவிட்டே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்துக்கு வர முடியும்.
கேள்வி: எப்போது முடிவை கூறுவீர்கள்?
பதில்: எப்படியும் நவம்பர் மாதத்தில் கூறுவோம்
கேள்வி: ஆளும் ஐககிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குறித்த நிலைப்பாட்டை தீர்மானிக்க ஏன் தயக்கம்?
பதில்: எமது கட்சியை பொறுத்தவரை முதலில் தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கே எங்களுக்கு உடன்பாடில்லை. தற்போதைய நிலைமையில் முதலில் பாராளுமன்றத் தேர்தல்தான் நடைபெறவேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடடில்லை. இதனை நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம்
கேள்வி: இடதுசாரி கட்சிகளும் இவ்வாறு கூறியுள்ளனவே?
பதில்: அதுபோன்றுதான் நாங்களும் கூறுகின்றோம்.
கேள்வி: அதற்கான காரணத்தை விளக்க முடியுமா?
பதில்: காரணம் தற்போதைய பாராளுமன்றம் நாட்டை உரிய முறையில் பிரதிநிதிதித்துவப்படுத்தவில்லை. தற்போதைய பாராளுமன்ற ஆசன சமன்பாடு என்பது நாட்டின் உண்மையான களநிலைவரத்தை பிரதிபலிக்கவில்லை. அரசியல் களநிலைவரத்தை பிரதிபலிக்கவில்லை. எனவே பாராளுமன்றத் தேர்தலைத்தான் நாங்கள் விரும்புகின்றோம் என்றார்.

இலங்கையில் எத்தனை விஞ்ஞானிகள் உள்ளனர் ?
ReplyDeleteமன்னிக்கவும், இலங்கையில் எத்தனை அரசியல் ஞானிகள் (தீர்கதரிசிகள்) உள்ளனர் ?
அவர்களின் பெயர்களை பட்டியல் படுத்தினால்,
முதலிடத்தில் வருபவர் யார் என இலங்கை மக்கள் இப்போது இலகுவாக கூறுவார்கள்.
This Tyrant and his Mafia group must be stopped from taking Muslim votes and give to Mahinda
ReplyDeleteThe above replies in plain English
ReplyDelete1.It depends on which party would give us enough money and positions.
2.We give these parties till November, But we are ready to sell the community at any time at any rate - the higher the better.
3.If Parliamentary elections take place first we can earn better.
4.Though we say the same our political tune is different.
5, Its difficult to fool the Muslims when it comes to a Presidential elections. In a Parliamentary elections we can field a number of candidates and demand money for each of their campaign.