Header Ads



கடலுக்கு அடியில் மாணவர்களுக்கு பாடம்

அமெரிக்காவை சேர்ந்த 2 பேராசிரியர்கள் கடலுக்கு அடியில் 73 நாட்கள் தங்கியிருந்து, மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பாடம் நடத்த முன்வந்துள்ளனர். அவர்கள் புளோரிடாவில் கடலுக்கு அடியில் உள்ள ஆய்வு மையத்தில் இருந்தபடி பாடம் நடத்த உள்ளனர். 

அமெரிக்காவின் தென்கிழக்கே புளோரிடா மாநிலத்தில் உள்ள டென்னசி நகரில் ரோனே மாநில சமுதாய கல்லூரி மிகவும் பிரபலமானது. இங்கு ப்ரூஸ் கான்ட்ரல் (63) மற்றும் ஜெசிக்கா பைன் (25) ஆகிய 2 பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். காரே லார்கோ பகுதியில் உள்ள கடலுக்கு அடியில் ஜூலிஸ் கடல் ஆய்வு மையத்தில் இவர்கள் இருவரும் கடல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடல் பாதுகாப்பு மற்றும் ஆய்வு தொடர்பான யு டியூப் இணையதளம் மூலம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 25-ம் தேதிவரை வீடியோ மூலம் பாடம் நடத்துகின்றனர்.

அத்துடன், நிலவில் நடந்த விண்வெளி வீரர் பஸ் ஆல்டிரைன் உள்ளிட்ட பல்வேறு கடல் ஆய்வு நிபுணர்களிடம் தங்களது ஆய்வு பணிகள் குறித்து விளக்கமளிக்கின்றனர். இதற்குமுன் கே லார்கோ கடற்பகுதியில் கடந்த 1992-ம் ஆண்டு, ஜூலை மாதம் ரிச்சர்ட் பிரஸ்லே கடலுக்கு அடியில் 69 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது.

தற்போது கான்ட்ரலும் ஜெசிக்காவும் கடலுக்கு அடியில் 73 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வது, ரிச்சர்ட்டின் சாதனையை முறியடித்து, கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.