Header Ads



'ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ்' பாலர் பாடசாலை விளையாட்டு விழா


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை மற்றும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை ஆகியவற்றின் 2014 வருடாந்த பாலர் விளையாட்டு விழா 12-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இவ் பாலர் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பாலர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சான்றிதழும்,பரிசில்களும்,கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.



No comments

Powered by Blogger.