Header Ads



வரலாற்றில் முதற்தடவையாக ஒரே தடவையில் 20000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம்


வரலாற்றில் முதற்தடவையாக  இன்று காலை (12) ஒரே தடவையில் 20000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

'பிரச்சினைகளற்ற நிலத்தின் உரித்துரிமை அபிவிருத்திக்கான அடித்தளமாகும்' என்ற தொனிப்பொருளில் இக்காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா- ரிஷாத் பதியுதீன்- சந்திரசிறி கஜதீர- வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி- பிரதி அமைச்சர் சிரிபால கம்லத்- பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக்- முருகேசன் சந்திரகுமார்- ஏ.எச்.எம் அஸ்வர்- ஆகியோர் கலந்துகொண்டனர்.



2 comments:

  1. Election is near..Election is near..Election is near..Election is near..

    ReplyDelete
  2. தர்கா டவுன் உடபட ஏனைய இடங்களிலும் கடைகள் சொத்துக்கள் பள்ளிவாயல்கள் மற்றும் தமிழ்,கிறிஸ்தவ உறவுகளுக்கும் எத்தனையோ அவலங்கள் நடந்தும் எல்லாப்பிழைகளும் முஸ்லிம்,தமிழ்,கிறிஸ்தவர்கள்தான் செய்தார்கள் என்று சொன்னவர்கள் இன்று தேர்தலுக்காக பெரும் கொடையாளிகளாக மாறியுள்ளார்கள். இது மக்கள் மனதை மாற்றும் நடவடிக்கை. இதை நம்பி மக்கள் சோரம் போய்விடக்கூடாது மூன்றாம் முறை இன்னுமொரு ஆட்சியை இந்த நாடு, நாட்டின் பெரும்பானமையினர் உட்பட அனைவருமே மிகவும் படுமோசமானதொரு நிலைமையை சந்திக்க வேண்டிவரும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கொன்று இலாமுமில்லை நஸ்டமுமில்லை என்ற வார்த்தையை பலரும் சொல்லக்கேட்டுள்ளோம் ஆனால் சென்ற தாசாப்தத்தில் நாட்டு மக்கள் எண்ணிலாப்பாடு பட்டவண்ணம் உள்ளார்கள் வாழ்க்கைச்செலவை சமாளிக்க முடியாமல் எத்தனை உயிர்கள் மாய்ந்துள்ளன இவைகள் நம் மனதில் இருக்கவேண்டும், மொத்தத்தில் இவ்வரசாங்கத்துடன் அங்காளி பங்காளிகளாக மிக மோசமானதொரு கும்பல் இருக்கின்றது ஆகவே அவர்களுக்குள்ளேயே இவ்வளவு பிரச்சினைகள் அது மூன்றாவது முறை ஆட்சிக்கு கொண்டு செல்லுமாயின் சொல்லவே வேண்டியதில்லை.
    அத்துடன் ஜனாதிபதியின் சகோதரனின் செயல்பாடு மிகவும் மொசமானவை என்பதை எல்லோரும் அறிந்ததே தேர்தல் காலமென்பதால் எல்லாவற்றையும் அடக்கி வாசிக்க சொல்லப்படுள்ளது.
    மக்களின் நிலையை மக்களே நிர்ணயிக்கவேண்டும். நல்லதோர் தலைமையை தேர்வு செய்து நாட்டில் நல்லதோர் ஆட்சியை நிறுவ மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது எமது கடமை ஆகவே நாம் எல்லோரும் எமது பங்களிப்பை கண்டிப்பாக வழங்கவேண்டும். நமது நாடும் நாட்டு மக்களு படு பாதகர்களின் கரங்களுக்கும் கண்டிப்பாக இந்த முறை அகப்படவே கூடாது. அது விடயமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய கடைமையிலுள்ளோம் ஆகவே நாம் அனைவரும் அதன் பிரகாரம் செயல் படுவொம்.

    ReplyDelete

Powered by Blogger.