வாழைச்சேனையில் 67 வயதுடைய முஸ்லிம் பெண் படுகொலை
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கோழிக்கடை வீதியில் ஹஜ்ஜுப் பெருநாள் முடிவடைந்து தனிமையில் இருந்த வயோதிபப் பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(05) படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கோழிக்கடை வீதியில் தனியாக வசித்து வந்த றம்ழான் கலீமத்தும்மா (வயது 67) என்ற வயோதிபப் பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த மூதாட்டி தனியாக வாழ்ந்துள்ளதோடு வாழ்வாதாரத்துக்காக இடியப்பம், அப்பம் போன்ற உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பன்புல் பாய் போன்றவற்றையும் பின்னி விற்பனை செய்து வருமானத்தையும் ஈட்டி வந்துள்ளார் என தெரியவருகின்றது.
அவரது வீட்டுக்கு சிறுமியொருவர் சென்றபோது, மூதாட்டி கழுத்து வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுபற்றிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர். ஏழு பிள்ளைகளின் தாயாரான இவரின் படுகொலை தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
.jpg)
Post a Comment