Header Ads



ரவூப் ஹக்கீமிடமுள்ள 3 இலட்சம் வாக்குகளை தகர்க்க, சிங்கள பௌத்தர்கள் முன்வரவேண்டும்.

சிறப்புரிமைக்காக வாக்குகளை ஏலம் போடும் தொண்டமான், ஹக்கீம் போன்றவர்களை ஓரம் கட்டி பௌத்தர்களை பாதுகாக்க யார் வருகின்றார்களே அவர்களையே ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கவேண்டும்.

நாயை வால் ஆட்டுவிக்கும் நிலையை மாற்றி நாய் வாலை ஆட்டுவிக்கும் நிலைக்கு நாம் வர வேண்டும் என ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளனார்.

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் 10 இலட்சம் சிங்கள பௌத்த வாக்குகளை அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் இதுவே எமக்குள்ள சவால்.

அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் திணைக்கள தலைவர் பதவிகளை பணத்திற்காக தமக்கு கிடைக்கும் வாக்குகளை ஏலம் போடுகின்றார்கள்.

அதற்கமையவே நாட்டு தலைவர்கள் தீர்மானிக்கும் நிலையை மாற்றி நாயை வால் ஆட்டுவிப்பதை தவிர்த்து நாய் வாலை ஆட்டுவிக்கவேண்டும்.

சம்பந்தன் 6 இலட்சம் வாக்கு, ஹக்கீம் 3 இலட்சம் வாக்கு, தொண்டமான் 2 இலட்சம் வாக்குகளை தம் வசம் வைத்துள்ளனர். இதை தகர்க்க சிங்கள பௌத்தர்களான நாம் வழியமைக்கவேண்டும்.

எதிர் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக வருபவர்களுக்கு இதை கூறி சிங்கள பௌத்தர்களான நாம் ஒரு அணியில் இணைய வேண்டும்.

எதிர்காலத்தில் சிங்கள பௌத்தர்களை பாதுகாக்கும் ஒருவருக்கே நாம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கவேண்டும் என அவர்  தெரித்தார்.

No comments

Powered by Blogger.