ஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் கலவரம்..!
GtN
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் பொதுவேட்பாளர் தெரிவு விடயங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் சஜித் பிரேமதாசாவை அழைத்தால் அந்த பிரச்சார கூட்டங்களில்
கலந்துகொள்ளப் போவதில்லை என கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்; ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை சஜித் பிரேமதசாவுக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்க வேண்டாம் என கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் என்பதை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்றும் மங்கள சமரவீர ரவி கருணாநாயக்க ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்கள சமரவி;ர அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஆனால் மங்கள சமரவீர அதற்கு உரிய பதிலளிக்கவில்லை என்றும் கட்சித் தகவல்கள் குறிப்பிட்டன.
ஊவா மாகாண சபைத் தேர்தல்; பிரச்சாரங்களில் மங்கள சமரவீர கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் அது தொடர்பாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி வருவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
.jpg)
Post a Comment