Header Ads



ஊவா மாகாண தேர்தலில் அரசாங்கம் அதிக வாக்குகளை இழக்கும் - அமைச்சர் ராஜித ஆருடம்


ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கணிசனமாக வாக்குகளை இழக்கும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலையில் 58 முதல் 60 வீத வாக்குகளும் பதுளையில் 52 முதல் 53 வீத வாக்குகளும் கிடைக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த தகவல் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகள் குறையும் என்பது தெளிவாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 72.39 வீத வாக்குகளை பெற்றது.

மொனராகலையில் 81.32 வீத வாக்குகளையும் பதுளையில் 67.79 வீத வாக்குகளை ஆளும் கட்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இனிமேல் ஆழும் கட்சியின் நன்மதிப்பு அவர்களிடமிருந்து தூரச்சென்று விட்டது. அவர்கள் செய்த ஊழல் அனைத்தும் அம்பலமாகியவண்ணம் உள்ளன அதை இனிமேல் மறைக்கும் சக்தி அவர்களிடம் இல்லையாதலால் அவர்களிடமுள்ள பலங்களை உபயோகித்து தேர்தலில் உச்சகட்ட ஊழலை செய்த்தாவது வெற்றிய பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.