Header Ads



ரணிலும், சஜித்தும் கத்தியை வைத்துக்கொண்டே கைக்குலுக்கி கொணடனர் - விமல் வீரவன்ச

ரணில் விக்ரமசிங்க செல்ல வேண்டிய இடத்துக்கு தான் அழைத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமைக்கு அமைச்சர் விமல் வீரவன்ஸ பதிலளித்துள்ளார்.
ரணில் செல்ல வேண்டிய இடம் வீடு தான் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என பசறையில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்திருந்தார்.

இது குறித்து ஊவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் கருத்து வெளியிடும் போதே வீரவன்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

யானை பின்நோக்கி செல்வதால், அண்மையில் பசறைக்கு வந்தனர். பசறைக்கு வந்து ரணில், சஜித்தை ஏமாற்றினார்.

கட்சியின் பிரதித் தலைவராக மாநாட்டில் அறிவிப்பதாக ரணில், சஜித்திடம் கூறியிருந்தார். இதனை கேட்ட சஜித் உற்சாகத்துடன் பசறைக்கும் வந்தார்.

சஜித் வந்த பின்னர், ரணில் அவரது கையை பிடித்து தூக்கினார். கையை பிடித்து தூக்கிய பின்னர் உரையாற்றிய ரணில், பிரதித் தலைவர் பதவி சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க வேண்டும் என தான் செயற்குழுவின் யோசனை முன்வைக்க போவதாக குறிப்பிட்டார். அதனை தன்னால் தனியாக செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ரணில் யோசனை முன்வைப்பார். செயற்குழு முடியாது என்று கூறும். பிரதித் தலைவர் பதவிக்கு நான் உங்களை பிரேரித்தேன். இவர்கள் முடியாது என்று சொல்லிட்டனரே என்று ரணில், சஜித்திடம் கூறுவார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பேசிய சஜித் பிரேமதாச, ரணில் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்ல தான் அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக தெரிவித்தார்.

சஜித்திற்கு அமைய ரணில் செல்ல வேண்டிய இடம் வீடு. ரணிலை ஜனாதிபதி பதவியில் அமர்த்த தான் அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக சஜித் கூறவில்லை. இதனால், சஜித் எண்ணுவது போல் ரணில் செல்ல வேண்டிய இடம் வேறு எதுமில்லை வீடு.

இவர்கள் இருவரும் கத்தியை இடுப்பில் சொருகி கொண்டே கைக்குலுக்கி கொள்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

ரணில் இடது கையிலும் சஜித் வலது கையிலும் கத்திகளை வைத்து கொண்டு கைகளை உயர்த்தினர். இந்த கத்திகள் எந்த சந்தர்ப்பத்தில் வெளியில் வரும் என்பதை கூறமுடியாது எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இது மற்றொரு பயங்கரவாதி. இவனுங்கெல்லாம் அரசாங்கத்தில் இருந்தால் நாடு எப்படி முன்னேறுவது. பெளத்த மக்களை இவர்கள் பக்கம் இழுக்க வேண்டுமானால் அவர்களுக்கு எதையாவது கண்ணில் காட்டித்தான் இவர்களுக்கு ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் தவிர நல்லவிடயங்களால் கவர்ந்த மக்களே இவர்களுடன் கிடையாது. பாமரர்கள் அவர்கள். அவரகளை பாவிகளாக மாற்றி வைத்துள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.