Header Ads



சவுதி அரேபியாவில் வாலிபர் மூக்கில் முளைத்த பல்

சவுதி அரேபியாவில் வாலிபர் மூக்கில் வளர்ந்த பல், ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.சவுதி அரேபியாவை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருக்கு அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர் டாக்டரிடம் சென்றார். அவரது மூக்கை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். 

அப்போது, நாசித் துவாரத்தில் எலும்பு போன்ற வளர்ச்சிஇருந்தது. அது என்ன என்று பரிசோதனை செய்த போது, அரை இன்ச் அளவுக்கு பல் முளைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து மருத்துவர்கள் குழு, அந்த வாலிபருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். பின்னர், ஆபரேஷன் மூலம் பல்லை டாக்டர்கள் அகற்றினார்கள். 

தற்போது அந்த வாலிபருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வருவது நின்று விட்டது. இதுபோன்று மூக்கில் பல் முளைப்பது ஒரு அபூர்வ நோய். ஆபரேஷனுக்கு பிறகு அந்த வாலிபர் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தெரிவித்தனர். 

இந்த செய்தியை நியூயார்க்கில் இருந்து வெளியாகும் மருத்துவ ஆய்வு இதழ் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.